ஆப்நகரம்

அடர்த்தியான முடிக்கு திரிபலாவை பயன்படுத்தும் முறை, எல்லோரும் பயன்படுத்தலாம்!


தலைமுடி பிரச்சனைக்கு இயற்கையான சக்தி வாய்ந்த பொருளை தேடினால் உங்களுக்கு திரிபலா கைகொடுக்கும்.

Samayam Tamil 4 Sep 2021, 7:47 pm
ஆயுர்வேதத்தின் முறைப்படி பாரம்பரிய மற்றும் முழுமையான திறனை திரிபலா கொண்டுள்ளது. தலைமுடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் பாதுகாப்பான இயற்கையான வழிகளில் ஒன்றாகவும் திரிபலா விளங்குகிறது.
Samayam Tamil how to use triphala powder for hair growth in tamil
அடர்த்தியான முடிக்கு திரிபலாவை பயன்படுத்தும் முறை, எல்லோரும் பயன்படுத்தலாம்!


திரிபலா இயற்கையான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது நரையை தடுக்கிறது மேலும் முடியை வயதாவதிலிருந்து தடுக்கிறது. திரிபலா பலவிதமான நன்மைகளையும் நீண்ட பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலையும் அளிக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கு பார்க்கலாம்.

​நரைமுடிக்கு திரிபலா

தேவை

தேங்காயெண்ணெய் - 5 டீஸ்பூன்

திரிபலா சூரணம் - 3 டீஸ்பூன்


தேங்காயெண்ணெயை இலேசாக சூடாக்கவும். இதில் திரிபலா சூரணத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக்கவும். குறைந்தது 5 நிமிடங்கள் வரை நன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கவும்.


டல்லான முகத்தை சட்டுனு மென்மையாக்கும் வெந்தயம், ஆயுர்வேத மருத்துவர் சொல்லும் அழகு குறிப்பு!


இதை உச்சந்தலையில் தடவி முடியின் நீளத்துக்கேற்ப விரல்களால் தடவி இலேசான மசாஜ் செய்துவிடவும். பிறகு 45 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து வெற்று நீரில் அலசி எடுக்கவும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் முடி நரை குறையத்தொடங்கும்.

​முடி வளர்ச்சிக்கு திரிபலா

தேவை

திரிபலா சூரணம் - 3 டீஸ்பூன் கூந்தலின் வளர்ச்சிக்கேற்ப இதை கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம்.


முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் வெற்று நீரில் திரிபலாவை கலந்து மெலிவாக முடி இருக்கும் இடங்களில் பயன்படுத்தவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். முடி விரைவாக வளர இவை உதவுகிறது.


தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் திரிபலாவை உள்ளுக்கு எடுத்து வரலாம். இவை முடி வளர்ச்சியை தூண்டும்


தொடர்ச்சியான முடி உதிர்தல் பிரச்சனையை கொண்டிருந்தால் திரிபலா நன்றாகவே பயனளிக்கும் . திரிபலாவின் மென்மையாக்கும் பண்புகள் கூந்தலில் ஈரப்பதத்தை போக்க உதவுகிறது மேலும் அலோபீசியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

​பொடுகுக்கு திரிபலா

பொடுகு நீங்க ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது உண்டு. திரிபலா சூர்ணா குறுகிய காலத்தில் நீடித்த பொடுகையும் வெளியேற்ற உதவுகிறது. திரிபலாவை மட்டுமே கொண்டு பொடுகை விரட்டலாம்.


தேவை

திரிபலா சூர்ணா - 6 டீஸ்பூன் (கூந்தலின் நீளத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ)

தண்ணீர் - தேவைக்கு


திரிபலா சூரணாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து உச்சந்தலையில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்து விடவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெற்று நீரில் மசாஜ் செய்து விடவும்.

​முடி அடர்த்திக்கு திரிபலா

தலைமுடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க மூலிகை முகமூடி சிறந்த வழியாகும். முடி அடர்த்தியை எடுக்க திரிபலாவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.


தேவை

திரிபலா - 4 டீஸ்பூன்

முட்டையின் மஞ்சள் கரு - 2

ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்


அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக தடிமனான பேஸ்ட் ஆக மாற்றவும். ஈரமான கூந்தலில் விரல்களை கொண்டே நன்றாக உச்சந்தலை மற்றும் கூந்தலின் நுனி பகுதியில் தடவி விடவும். மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் கழித்து வெற்று நீரில் கழுவி எடுக்கவும்.

​முடி அழுக்கு நீங்க திரிபலா

திரிபலா சூர்ணா உச்சந்தலையில் உள்ள இயற்கையான நச்சுகளை நீக்குகிறது. கூந்தலில் இருக்கும் அழுக்கை நீக்க விரும்பினால் திரிபலாவை இப்படி பயன்படுத்துங்கள்.


தேவை

திரிபலா சூரணம்- 1 டீஸ்பூன்

வேப்பம் பொடி - 1 டீஸ்பூன்

திரிபலாவையும் வேப்பம் பொடியையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் சிறிது நீர் விட்டு குழைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி, உச்சந்தலை சருமத்தை மென்மையாக்க மெதுவாக மசாஜ் செய்யவும். உச்சந்தலை அசுத்தங்கள் மற்றும் அழுக்குகள் இருக்கும் இடங்களில் பிரத்யேகமாக பயன்படுத்துங்கள்.


வறண்ட மெல்லிய உச்சந்தலையை கொண்டிருந்தால் சுத்தமான டீ ட்ரீ ஆயில் சேர்க்கலாம். ஆழமான சுத்திகரிப்பு எதிர்கொள்ள கூந்தலை அலசுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் விட்டு பிறகு வெற்று நீரில் அலசி எடுக்கவும்.

​முடி நீளமாக வளர திரிபலா

இயற்கையான கூந்தலின் அளவை அதிகரிப்பதன் மூலம் திரிபலா பல அற்புதங்களை செய்கிறது. இதில் உள்ள தான்றிக்காய் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது முடி வளர்ச்சியை தடுக்க செய்யும்.


உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை நீக்க செய்கிறது. தலைமுடியின் அளவை அதிகரிப்பதை தடுக்கும் பொடுகை குறைத்து வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.


வெள்ளை முடி வேகமா மறையணுமா, மருதாணி நெல்லி முட்டை மூணையும் இப்படி போடுங்க, பலன் கிடைக்கும்!


திரிபலாவை உள்ளுக்கு எடுக்கலாம். முடிக்கு பயன்படுத்தும் அனைத்து ஹேர் மாஸ்க் வகையிலும் இவற்றை பயன்படுத்தலாம்.


குறிப்பு

முடி வளர்ச்சி முடி அடர்த்தி குறைவாக இருக்க காரணம் செரிமானம் அல்லது கல்லீரலின் மோசமான செயல்பாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்வதன் மூலம் முடி அடர்த்தி மற்றும் முடி வளர்ச்சி இரண்டு நிலைகளையும் தடுக்க திரிபலா சூரணா உதவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்