ஆப்நகரம்

skin care tips: மணப்பெண் மாதிரி மேக்கப்பே இல்லாம உங்க முகமும் ஜொலிக்கணுமா... இந்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க...

திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண்கள் அழகாக ஜொலிக்க வெறும் மேக்கப் மட்டும் போட்டால் போதாது. சருமத்திற்கு உள்ளிருந்து போஷாக்குகளையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்க வேண்டும். சருமத்தை மிருதுவாகவும் இளமையாகவும், பொலிவாகவும் வைக்க கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

Samayam Tamil 21 Dec 2021, 10:14 am
திருமணத்தின் போது மணமேடையில் அழகாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதிலும் மணப்பெண் என்றால் கூடுதல் அழகு பராமரிப்பு விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். என்ன தான் மணப்பெண்கள் தங்கள் ஆடைக்கு ஏற்றவாறு நகைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தாலும் தோற்றத்திற்கு தகுந்தவாறு சரியான மேக்கப் என்பது மிகவும் அவசியம்.
Samayam Tamil tips for getting bridal glow at home
skin care tips: மணப்பெண் மாதிரி மேக்கப்பே இல்லாம உங்க முகமும் ஜொலிக்கணுமா... இந்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க...


​சருமம் ஜொலிக்க

சருமத்தை இளமையாகவும் இயற்கையாகவும் பளபளப்பாக வைக்க சில இயற்கை விஷயங்களை செய்து வர வேண்டும். திருமண நாளுக்கு சில நாளுக்கு முன்பிருந்தே அழகு சார்ந்த பராமரிப்பில் ஈடுபடுவது உங்க சருமத்தை மெறுகேற்ற உதவி செய்யும். நீங்கள் என்ன தான் அழகு நிலையங்கள் சென்று பேஷியல் போன்ற விஷயங்களை செய்தாலும் சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக வைக்க சில டிப்ஸ்களை பின்பற்றுவது அவசியம் ஆகிறது.

சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கவும், மென்மையான சருமத்தை பெறவும் சந்தனம் போன்ற பொருட்கள் உதவுகின்றன. சந்தனத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் இருப்பதால் சரும செல்கள் அழிவதை தடுக்கிறது. சந்தனம் மற்றும் தேன் கலந்து பூசுவதும் உங்களுக்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

​முல்தானி மெட்டி :

பொதுவாக முகத்தை சட்டென்று பொலிவாக வைக்க முல்தானி மெட்டி சிறந்த ஒன்றாகும். முல்தானி மெட்டி பேஸ் பேக்கை முகத்தில் அப்ளே செய்யும் போது சிறந்த மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இது முகத்தில் உள்ள கருப்பு புள்ளிகளை குறைக்கிறது. சருமத்திற்கு நல்ல நிறத்தையும் தன்மையையும் கொடுக்கிறது.

​விட்டமின் டி, சி உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் :

விட்டமின் டி மற்றும் விட்டமின் சி உட்கொள்ளுதலை அதிகரிப்பது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்க உதவுகிறது. விட்டமின் டி ஆனது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், சிவத்தல், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவுகிறது. மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு போன்ற விட்டமின் டி உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி விட்டமின் சி உணவுகளான தக்காளி, கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​இறந்த செல்களை நீக்குங்கள் :

வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்குவது அவசியம். சீரம் போன்றவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு சிறந்த அழகை கொடுக்கும். சருமத்தை மெருகூட்ட உதவி செய்யும்.

​சீரம் :

சீரமானது லிக்யூட் வடிவில் இருப்பதால் சருமத்தினுள் ஆழமாக ஊடுருவி கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்ற உதவுகிறது. இது சருமத்தை உறுதியாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்