ஆப்நகரம்

skin care routine: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கும்போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன...

சரும பராமரிப்பு விஷயங்கள் என்று வரும் போது நம்மளுக்கே தெரியாமல் சில விஷயங்களை செய்வது உண்டு. இந்த விஷயங்கள் தான் நம் சருமத்தை பாதிப்பதோடு சரும பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. எனவே சரும பராமரிப்பில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன அதை எப்படி சரி செய்யலாம் என அறிவோம்.

Samayam Tamil 20 Dec 2021, 6:41 pm
சரும பராமரிப்பு என்பது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க பின்பற்றப்படும் முறையாகும். தினசரி நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க சில விஷயங்களை செய்வது அவசியம். சரும பராமரிப்பு விஷயங்களை சரியாக கடைபிடித்து வரும் போது வயதாகுவது மெதுவாகும், பல்வேறு சரும பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
Samayam Tamil winter skin care mistakes in tamil
skin care routine: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கும்போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன...


​சருமப் பராமரிப்பு

நாம் இளமையாக ஜொலிக்கவும், சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இந்த விஷயங்கள் நம்மளுக்கு உதவுகிறது. அடிக்கடி முகத்தை கழுவது, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பது இதனுடன் சேர்த்து உங்க சரும பராமரிப்பு விஷயங்களை சரியாக செய்து வாருங்கள். இந்த சரும பராமரிப்பு விஷயங்களை செய்யும் போது நாம் சில தவறுகளை செய்வது உண்டு. இந்த தவறுகளை நாம் எப்படி தவிர்க்கலாம் என அறிவோம்.

​பருக்கள் இருக்கும் போது மாய்ஸ்சரைசர் வேண்டாம்

முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் தான் பருக்கள் ஆனது உண்டாகிறது. பருக்களில் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யும் போது அது நிலைமையை இன்னும் மோசமடைய செய்து விடும். எனவே பருக்கள் இருக்கும் சமயங்களில் லேசான எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

​டோனரை தவிருங்கள்

டோனர்கள் சருமத்தை வறண்டு போக வைத்துவிடும். மற்ற சரும பராமரிப்பு பொருட்களுடன் டோனர் சருமத்தை வறண்டு போக வைப்பது உண்டு. எனவே தினசரி டோனரை பயன்படுத்துவதை தவிருங்கள். மற்ற அழகு சாதனப் பொருட்களையும் மாய்ஸ்சரைசரையும் டோனர் இல்லாமல் பயன்படுத்தும் போது உங்க சருமம் ஈரப்பதத்துடன் இருக்க உதவி செய்யும்.

​சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு துடைத்தல்

சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு உலர வைக்கும் போது சருமம் வறண்டு போகக் கூடும். எனவே வறண்டு போன சருமத்தை சரி செய்ய டோனரை அப்ளை செய்யுங்கள். அப்புறம் சீரம் மற்றும் மாய்ஸ்சரைசரை அப்ளே செய்யுங்கள். இது உங்க சரும வறட்சியை போக்கி போதுமான ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

​சன்ஸ்க்ரீனை தவிர்ப்பது

சரும பிரச்சனைகள் வருவதற்கு சூரியக் கதிர்களும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த சூரியக் கதிர்கள் சருமத்தில் ஊடுருவி சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது. எனவே வெளியே செல்லும் போது சன்ஸ்க்ரீனை தவிர்க்காதீர்கள். முடிந்த SPF 30 இருக்கும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். ஆடைகள், தொப்பிகள் மற்றும் சன்கிளாஸ்கள் ஆகியவற்றையும் தவறாமல் அணிந்து செல்லுங்கள்.

​முகத்தை சோப்பினால் சுத்தம் செய்வதை தவிருங்கள்

முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவது சருமத்தை நீரிழக்கச் செய்து விடும். இது சருமத்தை வறண்டு போகச் செய்து இறந்த செல்களை அதிகரிக்கிறது. எனவே சரும pH அளவை பராமரிக்கும் விஷயங்களை தேர்ந்தெடுங்கள். மேலும் ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்குங்கள்.

​தவறான சரும பராமரிப்பு

சரும பராமரிப்புக்கு என்று விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விலை குறைந்த பொருட்கள் என்றாலும் இலகுவான பொருட்களை தேர்ந்தெடுங்கள். முகத்தை நன்றாக சுத்தப்படுத்திய பிறகே சீரம், கண் கிரீம் பிறகு மாய்ஸ்சரைசர் இவற்றை பயன்படுத்துங்கள். வாரத்திற்கு 2-3 முறையாவது ஸ்க்ரப் முறைகளை செய்யுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்