ஆப்நகரம்

பேஷன் 2021: பிகினி உடையில் ரசிகர்களை தெறிக்கவிடும் கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை பகிர்ந்து, ரசிகர்களை ஆச்சர்யத்தில் திளைக்க வைத்திருக்கிறார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 2 Sep 2021, 6:49 pm
நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் வித்தியாசமான சில கதாபாத்திரங்களை எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிகினி உடையில் ஃபோட்டோஷூட்டை நடத்தி அனைவரின் கவனத்தையும் அவரின் பக்கம் திசை திருப்பி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். குறிப்பாக கவர்ச்சியில் சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறார் இவர் என்றே கூற வேண்டும். நம்ம கீர்த்தி பாண்டியனா இவர் என்று கேட்கும் அளவுக்கு அவரது போட்டோ ஷூட் கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil bikini fashion keerthi pandian glamourous in bikini
பேஷன் 2021: பிகினி உடையில் ரசிகர்களை தெறிக்கவிடும் கீர்த்தி பாண்டியன்


​இன்ஸ்டா ஹாட்

பிகினி உடையில் அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அதற்கு கீழ் ஒரு குட்டி கதையையும் கூறியிருக்கிறார். அவர் கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். இவரைப் போலவே சமீபத்தில் ராதிகா ஆப்தேவும் பிகினியில் ஹாட் ஃபோட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

பிகினி மற்றும் ட்ரெஞ்ச் கோட் ஸ்டைலில் ராதிகா ஆப்தே

​பிகினி உடை

வெள்ளை நிற பிகினியில் ரசிகர்களை கொள்ளை அடித்து இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். சாண்டல் நிற பிகினியில் மாடல் அழகிகளை போல காட்சி தருகிறார். இதற்குமுன் எப்போதும் இல்லாத மெல்லிய உடல் அமைப்பில் பிகினியில் காட்சியளிக்கிறார்.

தமன்னாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் பர்ப்பிள் & பிளாக் பேஷன் ஸ்டைல்...

​ஆக்சஸரீஸ்

கோல்டன் கலரில் கழுத்தை ஒட்டிய பீட்ஸ் போன்ற செயினை அணிந்து இருக்கிறார். மேலும் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளும் ஒரு லாங் செயினும் அணிந்திருக்கிறார். கைகளில் சில்வர் கலரில் பிரேஸ்லெட் அணிந்திருக்கிறார்.

சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் கீர்த்தி பாண்டியன், தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிர்ந்த இந்த பிகினி உடை புகைப்படத்திற்கு பல்வேறு விதங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் என கலவையான கமெண்ட்ஸ் வந்தவண்ணம் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்