ஆப்நகரம்

எடை வேகமாக குறைக்க ப்ரக்கோலி காபி... எப்படி போடணும்... வாங்க தெரிஞ்சிக்கலாம்...

உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வகை டயட்டுகளை பின்பற்றி இருப்பீர்கள். வயித்தை கட்டி வாயைக் கட்டி எடையைக் குறைப்பது என்பதைவிட ஆரோக்கியமான முறையில் குறைப்பது மிக முக்கியம். அதேசமயம் ருசியாாகவும் சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்கவும் முடியும். காபியில் பட்டர் காபி, புல்லட் ப்ரூஃப் காபி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும் என்று நமக்குத் தெரியும். அதேபோல ப்ரக்கோலி காபியை வைத்து எப்படி எடையைக் குறைக்கலாம் என்று தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 11 Mar 2023, 1:22 pm
ப்ரக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது. இதை காபி வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். ப்ரக்கோலி காபியை எப்படி தயார் செய்வது, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், அதனால் எஎன்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
Samayam Tamil broccoli coffee for weight loss how to make broccoli coffee
எடை வேகமாக குறைக்க ப்ரக்கோலி காபி... எப்படி போடணும்... வாங்க தெரிஞ்சிக்கலாம்...


​ப்ரக்கோலி ஊட்டச்சத்துக்கள்​

ப்ரக்கோலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் கலோரிகள் மிக மிகக் குறைவு. ப்ரக்கோலியில், என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.

வைட்டமின் ஏ,
வைட்டமின் சி,
சோடியம்,
பொட்டாசியம்,
கார்போஹைட்ரேட்,
நார்ச்சத்துக்கள்.
புரதம்,
கால்சியம்,
இரும்புச்சத்து,

​ப்ரக்கோலியின் பிற நன்மைகள்​

ப்ரக்கோலியில் உள்ள அதிகப்படியான கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

அதிகப்படியான நார்ச்சத்துக்களும் குறைந்த கிளைசெமிக் குறியீடும் இருப்பதால் இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ப்ரக்கோலியில் உள்ள புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் அதிகமுள்ளதால் கேன்சர் வராமல் தடுக்க உதவி செய்யும். ப்ரோக்கோலி இதய நோய், புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

​ப்ரக்கோலி காபி போடுவது எப்படி?​

தேவையான பொருள்கள்

ப்ரக்கோலி பொடி - 2 ஸ்பூன்,
பால் - 1 கப்
காபி பொடி - அரை ஸ்பூன்,

தயாரிக்கும் முறை

ஒரு கப் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் காபி பொடி மற்றும் ப்ரக்கோலி பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ப்ரக்கோலி பொடி கடைகளிலும் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஆனால் நாம் வீட்டிலேயேயும் எளிதாகத் தயாரிக்க முடியும். ப்ரக்கோலியை சிறு சிறு துண்டுகளாகவோ அல்லது துருவியோ நன்றாக வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பிளண்டரில் சேர்த்து பொடி செய்து கொண்டால் ப்ரக்கோலி பொடி தயார்.

ப்ரக்கோலி காபி தயார். 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடரை எடுத்துக் கொள்வது அரை கப் ப்ரக்கோலியை பச்சையாகச் சாப்பிடுவதற்குச் சமம்.

​ப்ரோக்கோலியும் எடை இழப்பும்​

குறைந்த கலோரிகள் மட்டுமின்றி, ப்ரோக்கோலியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது சாப்பிட்டு நீண்ட நேரம் வரையிலும் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தருகிறது.

மேலும் இவற்றில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை உடைப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் 2017 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, குறைந்த அளவு வைட்டமின் சி உள்ளவர்களுக்கு குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு எரிக்கப்படுகிறது. அதிக அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்பவர்களைக் காட்டிலும் இது மிகக் குறைவு.

ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாக ப்ரக்கோலி இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.

அதோடு மட்டுமின்றி 90 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. மேலும் பைட்டோ கெமிக்கல்ஸ், சல்ஃபோராபேன் மற்றும் இண்டோல்-3-கார்பினோல் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்