ஆப்நகரம்

weight loss diet: எடை குறைக்க டயட்டில் இருக்கும்போது மீன் எடுத்துக் கொள்ள வேண்டிய முறைகள் என்ன...

மீன் உணவில் கொழுப்பு மிகக் குறைவு. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா 3 கொழுப்பு தான் அதில் அதிகமுள்ளன.ஆனால் அந்த மீனை நாம் தவறான முறையில் தான் எடுத்துக் கொள்கிறோம். அப்படி டயட்டில் இருக்கும்போது மீன் உணவுகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி சாப்பிடக் கூடாது என்று நாம் தெரிந்து கொள்வோம்.

Samayam Tamil 24 Oct 2022, 3:31 pm
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதைத் தவிர, ஆரோக்கியமான, சுத்தமான மற்றும் சீரான உணவை சாப்பிடுவது முக்கியம். பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான உணவுகளை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைக் கூட ஆரோக்கியமற்றதாக மாற்றி சாப்பிடுகிறோம். அப்படித்தான் மீன் உணவுகளையும். குறைந்த கலோரிகள் மற்றும் அதிக மெலிந்த புரதம், மீன்கள், மட்டி, ஸ்காலப்ஸ் போன்ற பெரும்பாலான கடல் உணவு பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் எடைக்கு சிறந்தவை.
Samayam Tamil mistakes to avoid eating fish during your weight loss diet
weight loss diet: எடை குறைக்க டயட்டில் இருக்கும்போது மீன் எடுத்துக் கொள்ள வேண்டிய முறைகள் என்ன...


​கடல் உணவுகளை உண்பதால் எடை குறையும் நன்மைகள்

மீன் என்பது மெலிந்த புரதத்தின் சிறந்த மூலமாகும், இது உங்கள் பசியை திருப்திப்படுத்த உதவுகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு உங்களை முழுதாக வைத்திருக்க உதவுகிறது.

கூடுதலாக, சால்மன், டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை திருப்திக்கு பங்களிக்கின்றன மற்றும் ஆரோக்கியமற்ற பசியைத் தடுக்கின்றன. மற்ற மெலிந்த இறைச்சியை விட மீன் அல்லது வேறு எந்த கடல் உணவையும் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் கொழுப்பு உட்கொள்ளலை குறைக்கிறீர்கள்.

இது கலோரிகளில் மிகக் குறைவு. இது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.

இருப்பினும், எடை இழப்புக்கு சமையல் அல்லது கடல் உணவைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் சில தவறுகளை செய்யலாம். அவற்றுள் சிலவற்றை கவனிக்க வேண்டும்

​தவறு 1: அதிகப்படியான எண்ணெய் தடவுதல்

எண்ணெய் அதிகமாக சேர்ப்பது உணவின் சுவையையும் உயர்த்தும். ஆனால் மீனில் அதிக எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் தோல்விதான் அடைவீர்கள்.

அதற்கு பதிலாக நீங்கள் ஆலிவ் ஆயில் சேர்க்கலாம்.

​தவறு 2: மீன் வறுவல்

வறுத்த உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. பெரும்பாலானவர்களுக்கு மீன் வறுத்தால் தான் பிடிக்கும். அல்லது எண்ணெயைப் பொரித்து எடுக்க வேண்டும்.

குழம்பில் சேர்க்கப்படும் மீனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது டயட்டில் மீன் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் பொரித்த, வறுத்த மீன்களைத் தவிர்த்துவிட்டு குழம்பில் சேர்த்த மீன்களை தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

​தவறு 3:

கொழுப்பு நிறைந்த மீன்களை பற்றி தவறாகப் புரிந்துகொள்வது

சால்மன், டுனா, கானாங்கெளுத்தி அல்லது ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் சில கலோரிகள் இருந்தாலும், அதைத் தவிர்ப்பது நல்லது என்று மக்கள் நினைக்கலாம், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்தது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் திருப்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும், இது ஒருவரின் இதயம் மற்றும் மூளைக்கும் நன்மை பயக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்