ஆப்நகரம்

samantha weight management: சமந்தா எடையை குறைக்க தினமும் சாப்பிடற அந்த ஒரு பொருள் என்ன தெரியுமா?

சமந்தா சிறந்த நடிகை மட்டுமல்ல, தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைக்கும் நபர். உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய எடையை கூடாமல் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க என்ன டயட்டை பின்பற்றுகிறார், என்ன உடற்பயிற்சிகள் செய்கிறார் என்று தெரிந்து கொள்வோம்.

Samayam Tamil 17 May 2022, 8:24 pm
தன்னுடை கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தி, அதற்கேற்ப முக பாவனைகளுடன் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் சமந்தா. அதே ஈடுபாடு அவருடைய உடல் மீதும் அதை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவருக்கு இருக்கிறது. அதற்காக அவர் ஜிம் வொர்க்அவுட் தொடங்கி நிறைய உழைக்கிறார். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil samantha ruth prabu snacking peanut butter for weight loss
samantha weight management: சமந்தா எடையை குறைக்க தினமும் சாப்பிடற அந்த ஒரு பொருள் என்ன தெரியுமா?


​உடற்யிற்சிகள்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது மற்றும் சைக்கிள் ஓட்டுதல், கயாக்கிங், பனிச்சறுக்கு மற்றும் பிற அவுட்டோர் ஃபிட்னஸ் விஷயங்களை அவர் மேற்கொள்கிறார்.

அதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கூட தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். உடற்பயிற்சி செய்யும்பேது கலோரிகள் போதுமான அளவு எரிக்கப்பட வேண்டும். போதுமான அளவு வியர்வை வெளியேற உடற்பயிற்சி செய்ய வேண்டுமென நினைப்பவர்.

​ஆரோக்கியமான டயட்

உடல் எடையைப் பராமரிக்க உடற்பயிற்சி எந்த அளவு கை கொடுக்குமோ அதே அளவுக்கு தன்னுடைய டயட்டிலும் அதிக கவனம் செலுத்துகிறார் சமந்தா.

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்துகிறார். அப்படி அவர் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் சுவையான உணவாகவும் போதிய அளவு புரதமும் கொண்ட பீநட் பட்டரை (peanut butter) தினமும் விரும்பி சாப்பிடுகிறார்.

​வேர்க்கடலை பட்டர் (peanut butter)

சமந்தா தன்னுடைய சமீபத்திய இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் தன்னுடைய தினசரி உணவாகவும் ஃபேவரட்டாகவும் இருக்கிற பீநட் பட்டரும் பிரட்டும் சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை கூட பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் அது தனக்கு மிகப் பிடிக்கும் என்றும் ஆரோக்கியம் நிறைந்தது என்றும் பதிவிட்டிருந்தார்.

​எடையை கட்டுப்படுத்த உதவும் பீநட் பட்டர்

பீநட் பட்டரில் கலோரி அளவு கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அவற்றில் அதிக அளவிலான புரதமும நார்ச்சத்தும் நல்ல ஆரோக்கியமான கொழுப்பும் இருப்பதால் கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. அதோடு மற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. அதனால் தான் சமந்தா தன்னுடைய தினசரி உணவில் சிறிதளவு பீநட் பட்டரை சேர்த்துக் கொள்கிறார்..

​பீநட் பட்டரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பீநட் பட்டரில்

  • புரதச்சத்து,
  • வைட்டமின்கள்,
  • மினரல்கள்,
  • நார்ச்சத்துக்கள்,
  • ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள்,
  • பொட்டாசியம்,
  • இரும்புச்சத்து

ஆகியவை அடங்கியிருக்கின்றன என அதன் ஊட்டச்சத்து விவரங்களையும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு உடல் எஎடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் ஆரோக்கியமான ஸ்நாக் என்றே இதை சொல்லலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்