ஆப்நகரம்

உடற்பயிற்சி செய்வதற்கு ஏன் காலை நேரத்தை விட மாலை சிறந்தது?

எடை இழப்பு என்பது ஓர் கடினமான செயல் ஆகும். இதற்கு, விடாமுயற்சியும் மற்றும் மன உறுதியும் தேவைப்படுகிறது. அதற்கு உணவு முறை எவ்வளவு அவசியமோ அதேபோல உடற்பயிற்சியும் முக்கியம். அந்த உடற்பயிற்சியை முறையாக மேற்கொள்வது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

Samayam Tamil 1 Oct 2020, 4:55 pm
எடை இழப்பு இலக்கை அடைய ஒவ்வொரு நாளும் நீங்கள் ஏதேனும் ஓர் சிறிய முன்னேற்றத்தை செய்ய வேண்டும். ஆனால் சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
Samayam Tamil உடற்பயிற்சி செய்வதற்கு ஏன் காலை நேரத்தை விட மாலை சிறந்தது?


அதாவது, உங்களின் தூக்க வழக்கம் அல்லது நீங்கள் உடற்பயிற்சி செய்யும் நேரம் போன்றவை கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக உடற்பிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள், உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடும் உணவுகள்,எந் நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் போன்ற வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றினால் தான் அந்த பயிற்சிக்கான முழு பலனையும் பெற முடியும்.

காபி அதிகமாகக் குடிப்பதால் என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்...

  1. நீங்கள் எதை பின்பற்ற வேண்டும் ?
    எடை இழப்புக்கு உடற்பயிற்சி செய்யும் போது, உங்களின் விடாமுயற்சி மற்றும் மன உறுதி ஆகிய இரண்டும் மற்ற விஷயத்தை விட மிகவும் முக்கியமானது என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில், எடை இழப்புக்கு நேரம் என்பது வெறுமனே ஒரு சிறிய பங்கை தான் கொண்டுள்ளது. இருப்பினும், இது முற்றிலும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏன்னெனில், சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மாலையில் உடற்பயிற்சி செய்து வருவது காலையில் உடற்பயிற்சி செய்வதை விட நீங்கள் உங்கள் எடை இழப்பு இலக்கை வேகமாக அடைய உதவுகிறது.
  2. மாலை உடற்பயிற்சி ஏன்?
    உடலின் ஓட்டத்திற்கும் மற்றும் உடலின் செயல்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் மறுஆய்வுவில், மாலையில் உடற்பயிற்சி செய்வது, காலையில் உடற்பயிற்சி செய்வதை காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு ஆய்வுகளும், முதன்மையாக எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டன. எலிகள் இரவில் விழித்திருக்க கூடிய ஓர் மாம்மல்ஸ் (பாலூட்டிகள்) என்பதால், மனிதர்களின் நேரப்படி அதனை மாற்றுவது தான் விஞ்ஞானிகள் எதிர் கொண்ட ஓர் முக்கிய சவால் ஆகும். பின்னர் 12 மனிதர்கள் மீது இதே சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர் மற்றும் இதனின் முடிவும் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையை போலவே இருந்தது.
  3. மாலையில் சிறந்ததாக கருதப்படுவதற்கான காரணம் என்ன?
    மாலையில் ஆக்ஸிஜன் நுகர்வு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது, இது உங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது, மேலும் இதன் காரணமாக நீங்கள் எடையை சற்று வேகமாக இழக்கிறீர்கள். ஆய்வில், எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் HIF-1a எனப்படும் புரதம், நீங்கள் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தும் மற்றும் எந்த மாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தும் உங்களின் உடல் எடை இழப்பிற்கு உதவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.உண்மையில், உடற்பயிற்சிக்கான அமெரிக்க கவுன்சிலின் கூற்றுப்படி, நெகிழ்வான மற்றும் சூடான தசைகள் காரணமாக நமது செயல்திறன் நிலை ஆனது மாலையில் சிறப்பாக இருக்கும். மேலும், உங்களின் போராட்ட விகிதம் குறைவாக இருக்கும். வலிமை உகந்ததாக இருக்கும். மற்றும் ஓய்வு எடுக்கக்கூடிய இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  4. நீங்கள் எப்பொழுது உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
    உண்மையில், எடை இழப்புக்கு காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது என்ற கூற்றை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில் ஒரு வலுவான முடிவுக்கு வர கூடுதல் ஆராய்ச்சி தேவைபடுகிறது. அதுவரை நீங்கள் காலையிலோ அல்லது மாலையிலோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாரு உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். எந்த வேலை செய்தலும் தினமும் தவறாமல் செய்து வருவது என்பது மிகவும் முக்கியம்.
  5. கவனிக்க வேண்டிய விஷயங்கள் ?
    நீங்கள் மாலையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை பின்வருமாறு,- தூங்க செல்வதற்கு நான்கில் இருந்து ஐந்து மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் இரவில் தூங்குவதில் சிரமம் ஏற்படும். - உடற்பயிற்சி செய்வதற்கு முன் உங்களை நன்றாக தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஏன் என்றால், உடற்பயிற்சி செய்ய உங்கள் உடலுக்கு ஆற்றல் தேவை.- சிறந்த முடிவுகளுக்கு உடல் வலிமை பயிற்சி, உடல் எடை பயிற்சிகள் மற்றும் கார்டியோ போன்ற பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்ளவும்.உடற்பயிற்சி செய்வது மட்டுமே உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு உதவாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடற்பயிற்சி உடன் சேர்ந்து ஆரோக்கியமான உணவு மற்றும் சத்தான உணவு ஆகிய இரண்டுமே நம் உடலுக்கு மிகவும் முக்கியான ஒன்று.

அடுத்த செய்தி

டிரெண்டிங்