ஆப்நகரம்

இந்தியா போன்ற நடுத்தர, ஏழை நாடுகளில் 80% பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமை!

உலக அளவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான நபர்களில் 80% பேர், இந்தியா போன்ற ஏழை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகம் வசிக்கும் நாடுகளில்தான் வசிப்பதாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

TNN 11 Jan 2017, 4:59 am
உலக அளவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான நபர்களில் 80% பேர், இந்தியா போன்ற ஏழை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகம் வசிக்கும் நாடுகளில்தான் வசிப்பதாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 80 per cent of all smokers live in low and middle income countries india one among it who
இந்தியா போன்ற நடுத்தர, ஏழை நாடுகளில் 80% பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமை!


உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 110 கோடி பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். அவர்களில், பலர் 15 வயது அல்லது அதற்கும் மேலானவர்கள் ஆவர். மேலும், இந்த நபர்களில் 80 சதவீதம் பேர், இந்தியா, பிரேசில், நைஜீரியா போன்ற ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் நிரம்பிய நாடுகளில்தான் வசிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களின் உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பான கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதில் ஏழை, நடுத்தர நாடுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால், அத்தகைய மக்கள் எளிதாக, புகைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் புகைப்பழக்கம் காரணமாக, உயிரிழக்கின்றனர். இதனை கருத்தில்கொண்டு, சர்வதேச சமூகம் புதிய விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Nearly 80 per cent of the over one billion tobacco smokers globally live in low- and middle-income countries like India, WHO said today and asserted that policies to control its use, including taxation and price increase, can generate revenues for health care and development work.

அடுத்த செய்தி

டிரெண்டிங்