ஆப்நகரம்

பைக் ரைடர்ஸ் செல்ல வேண்டிய முக்கியமான 3 இடங்கள்

அழகான பைக்கை வைத்துக்கொண்டு கரடி முரடான பாதைகளில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பைக் ரைடு போக அழகான மூன்று இடங்கள் உள்ளது

TNN 6 Mar 2017, 4:35 pm
அழகான பைக்கை வைத்துக்கொண்டு கரடி முரடான பாதைகளில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பைக் ரைடு போக அழகான மூன்று இடங்கள் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது பைக்கில் லாங் ட்ரிப் போகும் போது வரும் அனுபவத்தை யாராலும் கொடுக்க முடியாது. ஆனால், அதோடு வெயில், உடல்வலி போன்றவற்றையும் யாராலும் தடுக்க முடியாது. ஆனால், இவை எதுவுமே இல்லாமல் நம் நாட்டில் அழகாக பைக் ரைடு போக மூன்று முக்கியமான இடங்கள் உள்ளது.
Samayam Tamil are you a bike lover top 3 places where you can ride your beast
பைக் ரைடர்ஸ் செல்ல வேண்டிய முக்கியமான 3 இடங்கள்


ஜெய்பூர் டூ ஜெய்சால்மர்

கடினமான சாலைகளில் பைக்கில் பயணம் செய்யும் போது வலி அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கமும் இருக்கும். இவை எதுவுமே இல்லாமல் பயணம் செய்ய ராஸ்தானி கலாச்சாரமும், அதன் அழகும் உதாரணாம சொல்லப்படுகிறது.

ஜெய்பூரில் ஆரம்பிக்கும் பைக் ரைடு, ஜோத்பூரில் நிறுத்தி விட்டு ஒரு கப் டீ அருந்திவிட்டு, ராஜ்புதானாவின் கட்டிடக்கலையை ரசிக்கலாம். அதன் பின், பண்டைய கோட்டைகள் மற்றும் பிங்க் நகரமான ராஜஸ்தான் மாநிலத்தை சுற்றி வலம் வரலாம்.

லே டூ லடாக்

இங்குள்ள சாலை வழியாக பயணம் செய்ய அனைவரும் கனவாக கொண்டிருப்பர். மலைகளின் வசீகரம் பைக்கில் பயணிப்பவர்களை பைத்தியமாக்கும் அளவிற்கு இருக்கும். டெல்லியில் ஆரம்பித்து பஞ்சாபிலிருந்து இமாச்சல பிரதேசம் வழியாக சென்று லடாக் பகுதியை அடையலாம். மணலி வழியாக செல்லும் போது லடாக் பகுதியை அடைய 12 நாட்கள் ஆகும்.

மும்பை டூ கோவா

பைக்கில் பயணம் செய்ய மிகவும் புகழ்பெற்ற சாலையாக இது கருதப்படுகிறது. மும்பையிலிருந்து கோவாவிற்கு கிட்டத்தட்ட 609 கிலோமீட்டர் தூரம். மும்பையில் பைக் ரைடை தொடங்கி அப்படியே புனே வழியாக சென்று கோவாவை அடையலாம்.

Love for bike trips never fades out for those who believe in exploring the world and that too on a motorbike. The road less travelled when riding a heavy bike creates a thrilling yet amazing experience.

அடுத்த செய்தி

டிரெண்டிங்