ஆப்நகரம்

சீனாவில் செல்வம் கொழிக்கும் “காஸ்மெடிக் சர்ஜரி” அழகுக்கலை!

சீனாவில் செல்வம் கொழிக்கும் “காஸ்மெடிக் சர்ஜரி” அழகுக்கலை!

TOI Contributor 17 Sep 2016, 4:37 pm
காஸ்மெடிக் சர்ஜரி எனும் அழகுக்கலை மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதால் பணம் கொட்டும் தொழிலாக மாறியுள்ளது.
Samayam Tamil china companies earning dollars from cosmetic surgery
சீனாவில் செல்வம் கொழிக்கும் “காஸ்மெடிக் சர்ஜரி” அழகுக்கலை!


சீனாவில் காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வதால் சந்தோஷமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை மூலம் மேலும் அழகாக முடியும் என்கின்றனர். மேலும் இந்த தொழிலின் மூலம் கடந்த வருடம் மட்டும் 77 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 15% அதிகரிக்கும் என்பதால் 2019ல் இந்த வருவாய் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகம் அழகு பெற்றால் நம்பிக்கை ஏற்படும் என்ற எண்ணத்தில், இள வயதுக்காரர்கள் கூட இந்த சிகிச்சையை செய்து கொள்வதாக பீஜிங்கின் பார்லர் மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபலங்களுக்கான சிகிச்சை இது என்ற எண்ணமும் தற்போது எல்லோர் மத்தியிலும் மாறி இருக்கிறது.

சுமார் 70% மக்கள் இந்த சிகிச்சையை கடந்த வருடம் எடுத்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 20 வயது முதல் 40 வரை உள்ளவர்கள் முதல் நிலை சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடுத்த நிலை சிகிச்சை பெறுவதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த சிகிச்சையில் உள்ள பிரச்னை என்னவென்றால் செலுத்தும் பணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை மற்றும் தரத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைவு. அதனால் சீன வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள தென் கொரியாவிற்கு இது போன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள செல்கின்றனர் என்றும் சீனாவில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்