ஆப்நகரம்

கர்ப்பமான பெண்களுக்கு மதுப்பழக்கம்: பல தலைமுறைகளை பாதிக்கும் என தகவல்

'கர்ப்பம் தரித்த பெண்கள் மது அருந்தினால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமல்ல; பல தலைமுறையினர் பாதிக்கப்படுவர்,' என்கிறது புதிய ஆய்வு முடிவுகள்.

TOI Contributor 25 Feb 2016, 1:15 pm
'கர்ப்பம் தரித்த பெண்கள் மது அருந்தினால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமல்ல; பல தலைமுறையினர் பாதிக்கப்படுவர்,' என்கிறது புதிய ஆய்வு முடிவுகள்.
Samayam Tamil drinking alcohol during pregnancy can affect many generations new study warns
கர்ப்பமான பெண்களுக்கு மதுப்பழக்கம்: பல தலைமுறைகளை பாதிக்கும் என தகவல்


நவீன உலகில், ஆண், பெண் வேறுபாடு இன்றி, பலரும் மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில், மன மகிழ்ச்சிக்காக எனக் கூறினாலும், பின்னர் குடிப்பதையே முழு நேர தொழிலாக பலர் மாற்றிக்கொள்கின்றனர். குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், இரு பாலருக்கும் பொதுவானதாக, உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று, கர்ப்பம் தரித்த பெண்கள் மது அருந்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கர்ப்பமான பெண்கள், தொடர்ச்சியாகக் குடிப்பதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி, அதற்கடுத்த பல தலைமுறையினருக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற தாய்மார்களுக்கு, ஒயின் தொடங்கி, படிப்படியாக, உயர் ரக மது வகைகள் வரை கொடுக்கப்பட்டது. ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும், சரி; ஆல்கஹால் அளவு அதிகமாக உள்ள மதுவாக இருந்தாலும் சரி; தொடர்ச்சியாக, எந்த மது வகையை குடித்தாலும் ஒரேவிதமான பாதிப்புகளே ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆல்கஹால் பழக்கம் உள்ள தாய்மார்களுக்கு, பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. நாம் குடிப்பதால், பல தலைமுறைகளுக்கு மறைமுக பாதிப்புகள் ஏற்படும் என்பதை, தாய்மார்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றும், அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்