ஆப்நகரம்

திடீர் சந்தர்ப்ப செக்ஸ் குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு

பரிட்சயமானவர்களுடன் திடீரென செக்ஸ் கொண்டுவிட்டு, அதற்காக வருந்தும் பெண்களின் மனோபாவம் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Samayam Tamil 29 Sep 2018, 7:39 pm
தனக்கு பரிட்சயமானவர்களுடன் எந்த முன்னேற்பாடில்லாமல் திடீரென செக்ஸ் கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக வருந்தும் பெண்களின் மனோபாவம் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Samayam Tamil sex


ஒரே ஒரு இரவு மட்டும் திடீர் சந்திப்பில் தன் விருப்பமான ஆணுடன் பாலுறவு வைத்து கொண்டதை எண்ணி வருந்தும் மனநிலை, ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக இருந்ததாக முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. 547 நார்வே மாணவ, மாணவிகளிடமும், 216 அமெரிக்க மாணவ, மாணவிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் பலருடன் உறவு கொள்ளும் வழக்கம் உள்ள 30 வயதுக்குட்பட்டவர்களிடன் கேட்கப்பட்ட கேள்வியில் இந்த உணமை தெரியவந்துள்ளது.

ஏன் இந்த மனநிலை:
தான் கொண்ட பாலுறவால், திருப்தி அடைந்துவிட்டால், அந்த உறவு குறித்து எந்த மனகசப்பும் இல்லாத நிலையில் பெண்கள் உள்ளதாகவும், அதில் ஏதேனும் திருப்தி இல்லாவிடில் சிறிது வருத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனராம்.

இந்த வகைப் பெண்கள் இரண்டு வகை மனநிலை உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஒன்று இந்த பெண்களுக்கு ஆரோக்கிய பாலியல் உறவு மன நிலை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக எந்த மாதிரியான நபருடன் உறவு கொள்ள நினைக்கிறாரோ, அது போன்ற அனைத்து தகுதிகளும் அவருடன் இருக்கும் பட்சத்தில் இப்படி நடப்பதாக டெக்சாஸ் பல்கலை பேராசிரியர் ஜாய் பி வைகாஃப் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்