ஆப்நகரம்

ஆடம்பர செலவு செய்யும் மனைவியை கட்டுப்படுத்துவது எப்படி?

திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்னை இது. சிலர் திருமணம் முடித்தவுடன் தனிக்குடித்தனம் சென்றுவிடுவர். சுதந்திரமாக உள்ளோம், கண்டொக்கவோ கட்டுப்படுத்தவோ பெரியவர்கள் இல்லை என்ற நினைப்பும் துள்ளலும் கணவன், மனைவி ஆகிய இருவரிடமும் இருக்கும்.

Samayam Tamil 19 Feb 2019, 3:55 pm
திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்னை இது. சிலர் திருமணம் முடித்தவுடன் தனிக்குடித்தனம் சென்றுவிடுவர். சுதந்திரமாக உள்ளோம், கண்டொக்கவோ கட்டுப்படுத்தவோ பெரியவர்கள் இல்லை என்ற நினைப்பும் துள்ளலும் கணவன், மனைவி ஆகிய இருவரிடமும் இருக்கும்.
Samayam Tamil money


ஆனால் இருவரும் வேலைக்குச் செல்லுபவர்களாக இருப்பின் யார் சம்பளத்தை வீட்டுச் செலவுக்கு வைத்துக்கொள்வது, யார் சம்பளத்தை சேமிப்பு, ஆடம்பரச் செலவுகளுக்கு வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழும். பெரும்பாலும் இதில் வேலைச் செல்லும் மனைவியே வெற்றி பெறுவார்.

மனைவியில் சம்பளப் பணத்தை தன்னிடம் கொடுக்கக் கோரி கணவனால் நிர்பந்திக்க முடியாது. நவநாகரிக யுவதியாக உள்ள மனைவி தன் இஷ்டத்துக்கு ஆடம்பர செலவுகள் செய்வதும் அதனைக் கட்டுப்படுத்தமுடியாமல் கணவர்கள் தவிப்பது இன்று வாடிக்கையாகிவிட்டது.

இதற்குத் தீர்வு என்ன? சரியான பெண்ணை கரம் பிடிக்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் நாம் திருமண ஆசையில் தவறான பெண்ணை மணந்துவிட்டோமோ என்ற எண்ணம் இளைஞர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க நாடுகளில் இதற்காக விவாகரத்துவரை செல்லும் தம்பதிகள் மிகக் குறைவு. அது மடத்தனமும்கூட.

செலவை கட்டுப்படுத்தி விட்டுக்கொடுத்து வாழ்வது எப்படி என நீங்கள்தான் மனைவியிடம் பேச வேண்டும். இதனை பெரியவர்களிடம் விட்டுவிடலாம் என வீட்டுப் பெரியோர்களை அவர்களுக்கு புத்திமதி கூற வைப்பது நல்லதல்ல. உங்கள் அன்பை சந்தர்ப்பம் வாய்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக காட்டுங்கள்.

திரும்பத் திரும்ப பொருட்களை வாங்கிக் குவிப்பது நிரந்தர மகிழ்ச்சியைத் தராது, அது ஒருவகை ஷாப்பிங் மேனியா என தெரிந்தால் அவர்கள் இவ்வாறு ஆடம்பர செலவு செய்ய மாட்டார்கள். மன திருப்தி என்பது சின்ன சின்ன விஷயங்களில்தான் உள்ளதே தவிர, ஆடம்பர உடைகளிலோ, பொருட்களிலோ இல்லை என்பதை உணர்த்துங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும். வாழ்த்துகள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்