ஆப்நகரம்

யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியா!

முதல் முதலில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்திலேயே இந்தியா இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறது.

TNN 21 Jun 2017, 5:56 am
முதல் முதலில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்திலேயே இந்தியா இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறது.
Samayam Tamil india holds 2 world records on yoga day already
யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியா!


ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்ய சர்வதேச யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

2014ஆம் ஆண்டு ஐநா சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று மூன்றாவது ஆண்டாக சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முதல் ஆண்டாக 2015ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட யோகா தினத்தில் டெல்லியில் பிரம்மாண்டமான யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகுப்பில் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அந்த மாபெரும் யோகா வகுப்பில் 21 யோகாசனங்களை பங்கேற்பாளர்கள் செய்தார்கள். 35,985 பேர் இதில் கலந்துகொண்டது உலகின் மிகப்பெரிய யோகா வகுப்பாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 84 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா வகுப்பு என்ற வகையில் அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் கலந்துகொண்ட யோகா வகுப்பு என்ற கின்னஸ் சாதனையும் அன்று நிகழ்த்தப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்