ஆப்நகரம்

நியூயார்க் பேஷன் வீக்கில் ஒய்யார நடைபோட்டு, பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி மாடல்!

பேஷன் ஷோவில் நடைபோட்ட மாடல், உடனடியாக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 3:11 pm
நியூயார்க்: பேஷன் ஷோவில் நடைபோட்ட மாடல், உடனடியாக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil Slike Woods.


ஸ்லிக் வுட்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி மாடலான இவர், சைமன் தாம்சன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் நியூயார்க் பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி ஷோவில் கலந்து கொண்டார்.

இதற்காக கருப்பு நிற எளிய ஆடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யார நடை நடந்தார். இது நியூயார்க் பேஷன் வீக்கின் நிறைவு நிகழ்ச்சியாக புரோக்கிலினில் நடைபெற்றது.

22 வயதான சைமன் தாம்சன், பேஷன் ஷோவில் கலந்து கொண்டு, நேராக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு சபிர்(Saphir) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சைமனின் கணவர் அடோனிஸ் போஸ்ஸோவும் மாடலாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மார்க் ஜேகப்ஸ் என்ற பேஷன் டிசைனர் மூலம் சைமன் தாம்சன் பிரபலமடைந்தார்.

Model goes into labour minutes after walking in Rihanna's NYFW show.

அடுத்த செய்தி

டிரெண்டிங்