ஆப்நகரம்

வாழை மரத்தில் செடி நட்டு வளர்க்கும் அதிசயம்!

வாழை மரத்தில் செடி நட்டு வளர்க்கும் அதிசயம்!

TOI Contributor 2 Mar 2017, 3:00 pm
மண்ணில் தான் மரம், செடி, கொடி வளர்த்து பார்த்திருப்போம். ஆனால் இந்தோனேசியாவில் வாழை மரத்தின் மீது செடி வளர்க்கின்றனர். வாழை மரத்தின் எல்லா பாகமுமே மிகவும் பயன்தரக்கூடியது. அந்த வகையில் வெட்டப்பட்ட வாழை மரங்களையும் இந்தோனேஷியாவில் வீணடிக்காமல் பயன்படுத்துகிறார்கள்.
Samayam Tamil plantation in banana tree
வாழை மரத்தில் செடி நட்டு வளர்க்கும் அதிசயம்!


வெட்டப்பட்ட வாழை மரத்தில் துளையிட்டு அதில் மண்ணை நிரப்பி பயிர் செய்கின்றனர். இயற்கையாகவே வாழை மரத்தண்டில் தண்ணீர் அதிகம் இருக்கும் என்பதால் பயிரிடும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. வாழைமரத்தில் உள்ள ஈரப்பதத்தால் செடிகள் நன்றாக வளர்கின்றன. பயிரின் மகசூல் முடிந்த பின்பு வாழை மரங்கள் உரமாக மாறி மீண்டு நன்மை தருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்