ஆப்நகரம்

வைரக்கற்கள் கலந்த பெயிண்ட் அடித்ததால் பளபளக்கும் விலை உயர்ந்த கார்!

வைரக்கற்கள் கலந்த பெயிண்ட் அடித்ததால் பளபளக்கும் விலை உயர்ந்த கார்!

TOI Contributor 10 Mar 2017, 8:17 pm
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 1000 வைரக்கற்களை அரைத்து தூளாக்கி பளபளப்பாக காருக்கு பெயிண்ட் செய்துள்ளனர்.
Samayam Tamil rolls royce painting a car with diamond dust
வைரக்கற்கள் கலந்த பெயிண்ட் அடித்ததால் பளபளக்கும் விலை உயர்ந்த கார்!


ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் ஆடம்பரமான கார்கள் தயாரிப்பதில் முன்னோடி எனலாம். ஏனென்றால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அனைத்தும் விலை மதிப்பற்றவை. ஆடம்பரமாக கார் தயாரிக்கும் இந்த நிறுவனம் சமீபத்தில் வித்தியாசமான முறையில் தங்களது பிரம்மாண்டத்தை பறை சாற்றியுள்ளனர். 1000 வைரக்கற்களை தூளாக அரைத்து அதை பெயிண்ட் உடன் சேர்த்து காருத்து வண்ணம் தீட்டியுள்ளனர்.

வைரக்கற்கள் கொண்டு பெயிண்ட் செய்வது சாத்தியமா என்று ஆராய்ந்த பின்னர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த பெயிண்ட் அடித்த கார்கள் சற்று மங்கிய நிறத்தில் காட்சி அளித்தாலும், ஒளி படும் போது பிரகாசமாக காட்சி அளிக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த காருக்கு எலிகன்ஸ் என்று பெயர் வைத்துள்ளது. மேலும் இந்த காரை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வைக்க உள்ளனர். தனது வாடிக்கையாளர் ஒருவருக்காக பிரத்யேகமாக இந்த காரை தயாரித்துள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர் யார் என்பதை சொல்வதற்கு மறுத்துவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்