ஆப்நகரம்

‘தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் எளிதில் வரும்’

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு, ஆஸ்டியோபோராசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மான பாதிப்பு அதிகளவில் வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 23 Mar 2017, 5:56 pm
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு, ஆஸ்டியோபோராசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மான பாதிப்பு அதிகளவில் வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil south asian women at higher risk of osteoporosis study
‘தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் எளிதில் வரும்’


இதுதொடர்பாக, இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர்கள் குழு விரிவான ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற இனங்களைவிட, தெற்காசிய இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, இடுப்பு எலும்பு மற்றும் மூட்டுத் தேய்மானங்கள் அதிகளவில் வருவதாக, தெரியவந்துள்ளது.

காரணம், மாதவிடாய் காலத்தில், தெற்காசிய பெண்களுக்கு, ஊட்டச்சத்து காரணிகள் சிறுநீரில் வெளியேறிவிடுவதால், அவர்களின் உடல்வலு எளிதாக குறைந்துவிடுகிறது. அதேசமயம், மாதவிடாய் முடிவடைந்த பின்னர், இவர்களின் உடல்வலு சற்று அதிகரிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்குள்ளாகவே, நடுத்தர வயதுக்குள்ளாகவே, தெற்காசிய பெண்கள் பலருக்கும் எலும்புத் தேய்மானம் ஏற்பட்டுவிடுவதால், அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இடுப்பு வலி, கை, கால் மூட்டு வலி, கூன் விழுதல் உள்ளிட்ட பல பிரச்னைகளை, மற்ற நாட்டு பெண்களைவிட தெற்காசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் சந்திக்க நேரிடுகிறது.

வைட்டமின் டி குறைபாடும் இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. அதனை அதிகரிக்க, தெற்காசியப் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

London, Mar 23 (PTI) South Asian women may be more susceptible to osteoporosis and fractures in later life as they experience breakdown of bone tissues at a quicker rate, a first-of-its-kind study has found.

அடுத்த செய்தி

டிரெண்டிங்