ஆப்நகரம்

காதலர்களிடையே வன்முறைக்கு வழிவகுக்கும் ஆபாச தகவல்கள்: ஆய்வில் தகவல்

காதலர்கள் ஆபாசமான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவர்களிடையே வழிவகுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 6 Aug 2016, 8:56 pm
நார்வே: காதலர்கள் ஆபாசமான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவர்களிடையே வழிவகுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil study says teens who sext experience more violence in relationships
காதலர்களிடையே வன்முறைக்கு வழிவகுக்கும் ஆபாச தகவல்கள்: ஆய்வில் தகவல்


நார்வே நாட்டில் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 1000 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 1000 பேரில் 549 பேர் காதலிக்கின்றர். அவர்களில் மூன்றில் ஒருவர் தனது காதலன் அல்லது காதலியுடன் ஆபாசப் படங்கள் மற்றும் மெசேஜ்களை பகிர்ந்துகொள்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.

ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொள்வதால் அவர்கள் ஒருவரை மற்றொருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்துகிறார்கள். கட்டாயப்படுத்த முத்தமிடுவது முதல் உடலுறவுக்கு வற்புறுத்துவது வரை வன்முறைக்கு ஆளாகிறார்கள் அல்லது ஒருவர் மற்றவரின் மனதைக் காயப்படுத்தும் படி நடந்துகொள்கிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை ஸ்கான்டிநேவியன் பொது சுகாதார பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்