ஆப்நகரம்

கோடைகாலத்தில் வீட்டை ஜில்லுன்னு வைக்க சில டிப்ஸ்!!

கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னரே நம் ஊரில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெளியில் தான் வெயில் என்றால் வீட்டினுள்ளும் வெப்பம் தாங்க முடியவில்லை.

TNN 14 Apr 2017, 10:26 pm
கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னரே நம் ஊரில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெளியில் தான் வெயில் என்றால் வீட்டினுள்ளும் வெப்பம் தாங்க முடியவில்லை. அந்த அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. இரவினில் தூங்குவதே கஷ்டமாக உள்ளது. இப்படி வெப்பம் நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், நமது வீட்டை குளுமையாக வைத்துக் கொள்வதற்கு சில டிப்ஸ்!!!
Samayam Tamil tips to getting cool in home while summer
கோடைகாலத்தில் வீட்டை ஜில்லுன்னு வைக்க சில டிப்ஸ்!!


**வீட்டிலுள்ள மின்விசிறியின் அருகில் ஒரு கின்னத்தில் நிறைய ஸ் கட்டிகளைப் போட்டு வையுங்கள். இது ஏசியை விடவும் அறையை அதிக குளிர்ச்சியுடையதாக வைத்திருக்கும்.

**கதவு, ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். காற்றின் சுழற்சி அறையில் அதிகமாக இருந்தால் அதிக வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும்.

**கோடைகாலங்களில் வீட்டின் உள்ளே சிறுசிறு தொட்டிச் செடிகளை வளர்க்கலாம். அது வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

**வெள்ளை நிறத்திலுள்ள பல்புகளை வீட்டில் பயன்படுத்துங்கள்.

**ஜன்னல்களுக்கு அறையின் உள்புறமாக, நல்ல காட்டன் வகை துணியினால் ஆன திரையைப் போடுங்கள். இதனால், 20 சதவீதம் அறை ரூம் டெம்பரேச்சர் குறையும்.

**வீட்டின் மேற்கூரை வெள்ளைநிறத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளைநிறம் வெப்பத்தை ஈர்க்காது.
Tips to getting cool in home while summer

அடுத்த செய்தி

டிரெண்டிங்