ஆப்நகரம்

ஆண்டுக்கு ஒரு முறை தங்கமாக மாறும் நந்தி சிலை!

திருவண்ணாமலை ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலை ஆண்டிற்கு சூரிய ஒளிக் கதிர்களால், தங்கமாக ஒளிரும் அதிசயத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது.

TNN 12 Nov 2017, 12:08 am
திருவண்ணாமலை ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலை ஆண்டிற்கு சூரிய ஒளிக் கதிர்களால், தங்கமாக ஒளிரும் அதிசயத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது.
Samayam Tamil tirunvannamalai nandhi statue becomes gold when sun rays reflects
ஆண்டுக்கு ஒரு முறை தங்கமாக மாறும் நந்தி சிலை!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள பிரசத்தி பெற்ற திருத்தலம் ரிஷபேஸ்வரர் கோவில்.

எழில்மிகு தோற்றத்துடன் கூடிய இக்கோவில், சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலில் மூலவருடன் தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் உள்ளது. இதோடு, கோயில் வளாகத்தில் மிகப் பெரிய நந்தி சிலையும் உள்ளது.
இந்த நந்தி சிலையின் சிறப்பம்சம் என்னவெனில், கோவில் ராஜ கோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்ட, அடுத்த சில நேரங்களிலே, நந்தீஸ்வரர் தங்கமாக மாறி காட்சியளிப்பார்.

அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அதிசயம் நிகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம், 3ம் தேதியன்று இந்த நிகழ்வை கண்டு தரிசிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்