ஆப்நகரம்

மன அழுத்தம் முதல் உடல் கழிவுகள் வெளியேறுவது வரை நிறைய நன்மைகள் கொண்ட ஜாதிக்காய் எண்ணெய் பற்றி தெரியுமா

ஜாதிக்காய் எண்ணெய்யில் ஆன்டி செப்டிக், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் மயக்கம் மற்றும் வலி நிவாரணியாக செயல்படும் தன்மை காணப்படுகிறது. இது நம் மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தையும் நல்ல அமைதியான மனநிலையையும் கொடுக்கும்.

Samayam Tamil 23 Jul 2021, 5:29 pm
ஜாதிக்காய் எண்ணெய் மனதுக்கும் உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அளிக்கக் கூடியது. ஜாதிக்காய் ஒரு மசாலாப் பொருளாகும். ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை பயன்படுத்தி நிறைய உடல் உபாதைகளை சரி செய்கின்றனர். இந்த மசாலாப் பொருள் இந்தோனேசியாவின் ஸ்பைஸ் தீவுகளிலிருந்து தோன்றியிருந்தாக கூறப்படுகிறது. இந்த மசாலாப் பொருட்களை பராம்பரிய இந்திய உணவுகளில் சேர்ப்பது உண்டு. தேநீர்கள் மற்றும் வொயின் போன்ற பானங்களில் இதை சேர்ப்பதுண்டு.
Samayam Tamil 10 amazing health benefits of nutmeg oil
மன அழுத்தம் முதல் உடல் கழிவுகள் வெளியேறுவது வரை நிறைய நன்மைகள் கொண்ட ஜாதிக்காய் எண்ணெய் பற்றி தெரியுமா


​ஊட்டச்சத்துக்கள்

இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. ஜாதிக்காயில் இருந்து பெறப்படும் எண்ணெய்யை பயன்படுத்தி நாம் பலவித நோய்களை போக்க முடியும். ஜாதிக்காயின் நறுமணம் மன அழுத்தத்தை போக்கி நல்ல தூக்கம் மற்றும் ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது. இந்த எண்ணெய் மயக்க மருந்தாக செயல்பட உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், ஆண்டிசெப்டிக் பண்புகள் போன்றவை காணப்படுகிறது.

சரி வாங்க இந்த ஜாதிக்காய் எண்ணெய்யை பயன்படுத்தி எந்த மாதிரியான நன்மைகளை பெற முடியும் என அறிவோம்.

​ஜாதிக்காய் எண்ணெய்யின் நன்மைகள்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :ஜாதிக்காய் எண்ணெய்யில் தனித்துவமான நறுமணம் காணப்படுகிறது. இது மோசமான இரத்த ஓட்டத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. இது உடலுக்கு சூட்டை தந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

​மன அழுத்த நிவாரணியாக செயல்படுகிறது :

ஜாதிக்காய் எண்ணெய் மன அழுத்தத்தை எதிர்த்து போராடவும், வலியை குறைக்கவும் உதவுகிறது. இது ஒரு தூண்டுதலாகவும், மயக்க மருந்தாக செயல்படவும் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்திற்கு எதிராக செயல்பட உதவுகிறது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தசைவலியை குறைக்க முடியும். சைன மருத்துவர்கள் இந்த ஜாதிக்காய் எண்ணெய்யை பயன்படுத்தி மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் தசை வலி போன்றவற்றை போக்குகின்றனர்.

​மாதவிடாய் பிடிப்பை எளிதாக்குகிறது :

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, சோர்வு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. ஜாதிக்காய் எண்ணெய் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்காக்குகிறது. பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து வரும் போது முதன்மை டிஸ்மெனோரியா (மாதவிடாய் முந்தைய அறிகுறிகள்) வலியைக் குறைக்க இது உதவுகிறது.

​தூக்க தரத்தை மேம்படுத்துகிறது :

ஜாதிக்காய் எண்ணெய் ஒரு மயக்க மருந்து போல செயல்படுகிறது இது நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. இது தூக்கத்தை தூண்டவும் தூக்க தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

​அஜீரண சிக்கல்களை போக்குகிறது :

இந்த ஜாதிக்காய் எண்ணெய் வாயுத் தொல்லை, அஜீரணம், வயிற்று போக்கு போன்ற செரிமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் வாயுவால் உண்டாகும் வயிற்று வலியை போக்க உதவுகிறது.

​மூளையின் செயல்பாடு அதிகரிக்க

நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது மூளையின் செயல்பாட்டை தூண்டவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இது மூளையில் இருக்கும் சோர்வை போக்க உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் செறிவை மேம்படுத்த உதவுகிறது.

​வாய் துர்நாற்றம்

கெட்ட வாய் துர்நாற்றம் மற்றும் வாய்த் தொற்றை போக்க முடியும். ஜாதிக்காய் எண்ணெய் இயற்கையான வாசனை திரவியமாக செயல்படுகிறது. இது பல நோய்களுக்கு கிருமி நாசினியாக செயல்படுகிறது. பலவித குப்பை உணவுகளை சாப்பிடுவதால் உங்களுக்கு வாய்த்துர்நாற்றம் ஏற்படலாம். ஜாதிக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் கெட்ட பாக்டீரியாக்கள் குடியிருப்பை தடுக்கிறது.

​சுவாசத் தொற்று

சுவாச நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி ஜாதிக்காய் எண்ணெய் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை குணப்படுத்த உதவுகிறது. எனவே இருமல், சலதோஷம் போன்ற உடல் உபாதைகளுக்கு இந்த எண்ணெய்யை சுடுநீரில் கலந்து நீராவி பிடித்து வரலாம். இரத்த பராமரிப்புக்கு உதவுகிறது.

​நீரிழிவு பிரச்சினை

இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது :ஜாதிக்காய் எண்ணெய் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. உடலில் உள்ள இன்சுலின் அளவை பராமரிக்கிறது. இது உடலில் உள்ள இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

​நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது :

இது உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை அகற்ற உதவுகிறது. இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் அழகாகவும், வயதான தோற்றம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவி செய்கிறது. சுருக்கம் இல்லாத இளமையான தோற்றத்தை இது கொடுக்கும்.

எனவே இந்த எண்ணெய்யை உங்க சாலட் மற்றும் உணவுகளில் சேர்த்து வாருங்கள். ஜாதிக்காய் எண்ணெய்யின் அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்