ஆப்நகரம்

எப்பேர்ப்பட்ட தொற்றையும் தாங்கும் நுரையீரல் வேணும்னா தினமும் இந்த 5 விஷயத்த பண்ணுங்க

பெரும் தொற்றுக்களோ சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளோ வந்தால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல் தான். உங்கள் நுரையீரலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கான எளிய வழிகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Samayam Tamil 19 Oct 2020, 10:16 am
நுரையீரலின் காற்றுப்பாதையில் பல்வேறு பொருட்களால் உண்டாகும் சேதங்கள் காரணமாக நுரையீரல் செயல்பாடுகள் பாதிக்கின்றன. இதன் காரணமாக நுரையீரல் நோய்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது. சில எளிய வழிகள் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
Samayam Tamil 5 simple ways to keep your lungs very strong and healthy
எப்பேர்ப்பட்ட தொற்றையும் தாங்கும் நுரையீரல் வேணும்னா தினமும் இந்த 5 விஷயத்த பண்ணுங்க


​ஆரோக்கியமான நுரையீரல்

பெரும்பாலும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்வரை நுரையீரல் ஆரோக்கியத்தை மக்கள் அலட்சியம் செய்கின்றனர். சுவாச மண்டலத்தின் முதன்மை உறுப்பாக இருப்பது நுரையீரல். காப்பிலரி என்று அறியப்படும் இரத்த தந்துகிகளுக்கு பிராணவாயுவைத் தந்து இரத்தத்தில் பிராணவாயு சேர்வதற்கு நுரையீரல் உதவுகிறது. மூச்சுக்காற்றை வெளியில் விடும்போது உடலில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற உதவுகிறது. எல்லா நேரமும் செயல்பாட்டில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் நுரையீரலும் ஒன்றாகும்.

சுவாசம்

ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் 25,000 முறை சுவாசிக்கிறான். இருப்பினும், நுரையீரல் காற்றுப்பாதையில் உண்டாகும் சேதம் நுரையீரலின் செய்லபாட்டுத் திறனில் தடையை ஏற்படுத்தி நுரையீரல் நோய்களுக்கு வழிவகுக்கின்றன. நுரையீரல் நோய் என்பது நுரையீரலை பாதிக்கும் பல்வேறு கோளாறுகளை குறிப்பிடுகிறது. ஆஸ்துமா, சிஓபிடி என்னும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, எம்பிஸிமா என்னும் திசுக்களில் காற்று பரவிய நிலை, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், காசநோய், நுரையீரல் புற்றுநோய், ஏஆர்டிஎஸ் என்னும் மோசமான சுவாச கோளாறு நோய்க்குறி போன்றவை இவற்றுள் அடங்கும். சிலவகை நுரையீரல் நோய்கள் சுவாச செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.

கீழே உள்ள சில குறிப்புகள் மூலம் நுரையீரலை எளிமையான வழியில் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

​புகைப்பழக்கம்

சிகரெட் புகையில் ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. தீவிர நுரையீரல் நோய்களான சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் போன்றவை உண்டாக முக்கிய காரணியாக விளங்குவதாக நம்பப்படுவது புகைப்பழக்கம். புகைப்பழக்கத்தை தவிர்ப்பதால் அல்லது கைவிடுவதால் நுரையீரல் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அதிக நேரம் உறவில் நீடிக்க உடலுறவுக்கு முன் என்னென்ன எண்ணெய்களை பயன்படுத்தலாம்...

​மூச்சுத்திணறல்:

காற்றில் இருக்கும் பல்வேறு மாசு மற்றும் தூசு உங்கள் நுரையீரலில் சேதம் உண்டாக்க முடியும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். முடிந்தவரை மாசு மற்றும் தூசுகளிலிருந்து தள்ளி இருப்பது நல்லது. லாண்டரி பொருட்கள் மற்றும் ஏர் ஃப்ரெஷனர்கள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய செயற்கை வாசனை திரவியங்கள் சில நச்சு பொருந்திய ரசாயனங்களை வெளியிடுகின்றன. ஆகவே சுற்றுப்புறத்தில் உள்ள மாசு மற்றும் தூசு குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

​மூச்சு பயிற்சி :

நுரையீரல் பிரச்சனைகள் அல்லது இதய நோய்கள் போன்றவை எளிதில் உங்களைத் தாக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாகும். தொடர்ந்து ஆழமான மூச்சுப்பயிற்சியை செய்து வருவது உங்கள் நுரையீரலை வலிமையாக வைக்க உதவுகிறது, மேலும் நுரையீரல் மற்றும் இதர உறுப்புகளில் படிந்திருக்கும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. ஆகவே ஆழமான மூச்சுப்பயிற்சியை பயிற்சி செய்வது நன்மை அளிக்கும்.

அயோடின் பற்றாக்குறையா? இதோ உப்பு தவிர அயோடின் நிறைந்த 5 சூப்பர் உணவுகள்... அடிக்கடி உணவில் சேருங்க...

​காய்கறிகள்:

ஆன்டிஆக்சிடெண்ட், புரதம், போலேட் மற்றும் கூட்டு கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவு சேர்க்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. இந்த ஊட்டச்சத்துகள் ஆரோக்கியமான நுரையீரல் செயல்பாட்டிற்கு உதவுகின்றன மற்றும் நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சுத்தம் செய்கின்றன. டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு போன்றவை அடங்கிய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஆகவே சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவது அவசியம்.

​உடற்பயிற்சி :

உடற்பயிற்சி செய்வதால் நுரையீரலில் திறன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதயம் மற்றும் தசைகளுக்கு ஆக்சிஜன் போதுமான அளவு வழங்கப்படுகிறது. மூச்சுத்திணறல், மூச்சுவிடும்போது வலி, ஒரு செயலில் ஈடுபடும்போது மயக்கம், தொடர்ச்சியான இருமல் போன்றவை நுரையீரல் தொடர்பான பாதிப்புகளின் சில அறிகுறிகளாகும். உங்களுக்கு இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். ஆகவே உடைபயிற்சி செய்வதை வழக்கமாகிக் கொள்வது நல்லது.

உங்கள் அங்கநிலைகளை கவனிக்கவும்:

நுரையீரல் என்பது மென்மையான வடிவம் கொண்டது என்பதால் நீங்கள் கொடுக்கும் இடத்தை அது பெற்றுக் கொள்கிறது. ஆகவே நீங்கள் நிமிர்ந்து நேராக உட்கார்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் நுரையீரலுக்கு அதிக இடம் கிடைக்கும். அதன் சுருங்கி விரியும் தன்மை மேம்படும்.

​நீர்ச்சத்துடன் இருப்பது :

உடலின் மற்ற பகுதிகளுக்கு போதுமான தண்ணீரின் தேவை இருப்பது போல் நுரையீரலுக்கு தண்ணீர் சத்து போதுமான அளவு தேவைப்படுகிறது. நாள் முழுவதும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் நுரையீரலில் உள்ள சளி திசுக்கள் மெலிதாக இருக்க முடிகிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு மேம்படுகிறது. ஆகவே அடிக்கடி தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் பருகுங்கள்.

ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய சில உண்மைகள்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

​சிரிப்பு :

வயிற்று தசைகள் சிறந்த முறையில் வேலை செய்யவும் , நுரையீரல் செயல்திறனை மேம்படுத்தவும் சிரிப்பு ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இந்த வகை உடற்பயிற்சியின் மூலம் நாட்பட்ட பழைய காற்று வெளியேற்றப்பட்டு நுரையீரலின் பெரும்பகுதிகளில் புதிய காற்று நிரப்பப்படுகிறது. ஆகவே அடிக்கடி சிரித்து பழகுங்கள்.

​சுறுசுறுப்பாக இருப்பது :

மிதமான அளவு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வதால் மூன்று செயல்கள் உடனடியாக நடக்கின்றன, ஒன்று - ஆரோக்கியமான நுரையீரல், மற்றொன்று - ஆரோக்கியமான இதயம் மற்றும் மூன்றாவது - நல்ல மனநிலை. ஆகவே தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி, சைக்கிளிங் பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்.

இந்த மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க... ஹெல்த்தியாவும் இருக்கும்... மெட்டபாலிசமும் அதிகரிக்கும்...

கவனத்தில் கொள்ள வேண்டியவை

நுரையீரல் ஆரோக்கியம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் :

1. புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

2. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் தரம் குறித்து கவனமாக இருங்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

3. அடிக்கடி கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கழுவுவதால் பொதுவான சளி மற்றும் சுவாசம் தெடர்பான பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

4. ஃப்ளு காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்த்திடுங்கள்.

5. ஒவ்வொரு ஆண்டும் ஃப்ளு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும். இதனை மற்றவர்களுக்கும் அறிவுறுத்தவும்.

6. கார்டியோ உடற்பயிற்சி செய்வதனால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

7. ஆழமான மூச்சுப்பயிற்சியை பின்பற்றவும்.

8. பல் ஆரோக்கியம் மற்றும் வாய் தொடர்பான சுகாதாரம் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் வாய் வழியாக காற்றுப்பாதையை அடையும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளைத் தடுக்க முடியும்.

9. உங்கள் உடல் நலம் குன்றியிருந்தால் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும்.

10. நுரையீரல் ஆரோக்கியத்தில் எதாவது பாதிப்பு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் குடும்பத்தின் நோய்கள் குறித்த வரலாற்றை பற்றி தெரிவித்து தகுந்த ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்