ஆப்நகரம்

பல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் வராம இருக்கணும்னா என்ன சாப்பிடணும்? என்ன சாப்பிட கூடாது?

பெருந்தொற்று காலத்தில் பற்குழிகள், ஈறுகளில் இரத்தம் வழிவது , வாய் புண் அல்லது இதர வாய் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றிற்காக பல் மருத்துவரிடம் சென்று காத்திருப்பதை மக்கள் சற்று மறந்துள்ளனர்.

Samayam Tamil 25 Jul 2020, 2:34 pm
கோவிட் 19 பெருந்தொற்று காலகட்டத்தில் பலரும் தங்கள் வாய் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள நினைத்து பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர். இதனால் பல் மருத்துவரை சந்திப்பதற்கான தேவை குறைகிறது. எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எந்த உணவை உட்கொள்ளக் கூடாது என்ற ஞானம் இருந்தால், உங்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
Samayam Tamil 5 to eat and 5 to avoid foods for great oral health in tamil
பல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் வராம இருக்கணும்னா என்ன சாப்பிடணும்? என்ன சாப்பிட கூடாது?


​சர்க்கரை சோ்த்த உணவுகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் , உயர் கார்போஹைட்ரேட் உணவுகள் , குறிப்பாக ஊட்டச்சத்து மதிப்பு குறைவான உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகள் மட்டுமில்லாமல் கால்சியம், பாஸ்போரோஸ், மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

​வாய் ஆரோக்கியம்

பெருந்தொற்று காலத்தில் உங்கள் வாய் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்காக உங்கள் உணவில் முதலில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் நாவிற்கு சுவை கூட்டும் உணவுகள், உங்களுக்கு சௌகரியமான உணவுகள், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை.

வலிமையான பற்கள் பெறுவதற்கு சர்க்கரை மற்றும் கார்போ சத்து குறைவாகவும் , நார்ச்சத்து மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துகளான கால்சியம் , பாஸ்போரோஸ், மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை சேர்க்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, அமிலத்தன்மை உள்ள , உயர் கார்போ சத்து உள்ள , ஊட்டச்சத்து மதிப்பு குறைவாக உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வாய் ஆரோக்கியத்தை நல்ல முறையில் அதிகரிக்க உதவும் 5 வகை உணவுகள் குறித்து நாம் இப்போது காணவிருக்கிறோம். இந்த உணவுகள் பற்குழிகள், ஈறுகளில் இரத்தம் வழிதல் , அதிக உணர்திறன் கொண்ட பற்கள் ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வைத் தரும்.

​கொக்கோ

சாக்லேட் என்பது அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தை தரக் கூடிய ஒரு உணவாகும். அதே நேரத்தில் இதில் சர்க்கரை சேர்க்கப்படாமல் இருந்தால் பற்குழிகள் தடுக்கப்படும் , வாயில் உள்ள சில குறிப்பிட்ட கிருமிகள் பாதிப்பு உண்டாக்கவிடாமல் தடுக்கும் , மற்றும் பற்களில் கறை படிவதைத் தடுக்க முடியும்.

2009ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் , கொக்கோவில் உள்ள பாலிபீனால் பற்குழிகள் உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது மற்றும் பற்களுக்கும் கறைகளுக்கும் இடையில் ஒரு தடுப்பை உண்டாக்க உதவுகிறது. சர்க்கரை இல்லாத கொக்கோ அல்லது டார்க் சாக்லேட் போன்றவற்றை உட்கொள்வதால் சாக்லேட் சாப்பிடுவதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும்.

பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகமாயிடுச்சா, தினமும் இதை குடிங்க, பலன் கிடைக்கும்

​பால் பொருட்கள்

சீஸ், பட்டர் போன்ற பால் பொருட்கள் வைட்டமின் கே2 அதிகம் உள்ளவையாகும். இந்த ஊட்டச்சத்து ஆரோக்கியமான பற்கள் பெற உதவுகிறது. இருப்பினும் உலக ஜனத்தொகையில் பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் கே2 குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மனிதனைத் தவிர இதர பாலூட்டிகள் செரிமான மண்டலத்தில் வைட்டமின் K 1 சத்தை K 2 சத்தாக மாற்றும் தன்மையை கொண்டுள்ளன. ஆனால் மனித இனத்திற்கு அதற்கான சரியான நொதிகள் கிடையாது.

​கொழுப்பு மீன்கள்

பல ஆரோக்கியமான உணவு கட்டமைப்பில் கொழுப்பு மீன்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவற்றில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த சத்து மிகவும் அவசியம். யாரும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் , இந்த சத்தின் காரணமாக பற்கள் அழுகுவது குறையும்.

வைட்டமின் ஏ மற்றும் கே 2 ஆகியவற்றுடன் இணைந்து வைட்டமின் டி சத்து பற்களுக்கு கால்சியம் சத்தை தருகிறது, இதனால் பற்கள் வலிமை அடைகிறது. இந்த ஊட்டசஹதுகளின் குறைபாடு காரணமாக பற்களின் எனாமல் வலிமை குறைகிறது.

நாம் குடிக்கும் எந்தெந்த ஜூஸ்கள் நம் உடலுக்கு நல்லது... எதையெல்லாம் தவிர்க்கலாம்...

​கீரை வகைகள்

கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற்றாக கீரைகள் நைட்ரைட் குறைக்கும் கிருமிகளை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இதனால் நைட்ரிக் ஆக்சைடு அதிகரித்து உங்கள் வாய் மற்றும் இதயம் ஆகியவை நன்மை அடைகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் கீரை உட்கொள்வதால் உங்கள் பற்கள் தூய்மை அடைகின்றன.

​பப்ளிமாஸ் என்னும் கிரேப்புரூட் மற்றும் ஆரஞ்சு

அமில உணவுகள் பெரும்பாலும் பற்களுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் அதே நேரத்தில் சில புளிப்பு பழங்கள் பற்களுக்கு நன்மை அளிக்கின்றன. ஆனால் அவற்றை மிதமான அளவு உட்கொள்வது அவசியம். பப்ளிமாஸ் என்னும் கிரேப்புரூட் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இந்த சத்து வாயில் உள்ள இணைப்பு திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களை வலிமையாக்க உதவுகின்றன. ஈறுகளில் அழற்சி ஏற்படுவதை தாமதப்படுத்த உதவுகிறது . இதனால் ஈறு பாதிப்பு உண்டாவது குறைகிறது.

நாம் குடிக்கும் எந்தெந்த ஜூஸ்கள் நம் உடலுக்கு நல்லது... எதையெல்லாம் தவிர்க்கலாம்...

​க்ராக்கர்ஸ்

இனிப்பு கேண்டியை விட க்ரக்கேர்ஸ் பற்களுக்கு தீமை உண்டாக்கும் என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அதுவே உண்மை.

சால்டைன் , கோல்டுபிஷ் போன்ற க்ரக்கேர்ஸ்ல் உள்ள கார்போஹைரேட் வாயில் விரைவாக உடைக்கப்பட்டு வாயில் உள்ள கிருமிகளுக்கு உணவாக மாறுகிறது. இந்த கிருமிகள் மெல்லப்படும்போது அவை அமிலத்தை வெளியிட்டு பற்களில் கறைகளை உண்டாக்கி பல் அழுகும் நிலை உண்டாகிறது.

​உலர் பழங்கள்

பழங்கள் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் உலர் பழங்கள் என்பது தண்ணீர் முற்றிலும் உறிஞ்சப்பட்ட பழங்கள் ஆகும். தண்ணீர் உறிஞ்சப்பட்ட பழங்கள் சர்க்கரை உள்ள கேரமல் போன்றதாகும். அதனால் வாய் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, பற்குழிகள் உண்டாகிறது. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் பழங்களைவிட புதிதாக பறித்த பழங்கள் நன்மை அளிக்கும்.

வெளில போனா நாம விரும்பி சாப்பிடற சில உணவுகளில் எது மோசமானது? எது ஆரோக்கிய உணவு?

​சோடா

சோடாவில் உயர்ந்த அளவு சர்க்கரை உள்ளது. எல்லா வித சோடாவிலும் , கலோரிகள் இல்லாத சோடாவிலும் அதிக அளவு அமிலம் உள்ளது. pH அளவீட்டின்படி 2அல்லது 3 என்ற தர எண் பெற்ற மென்மையான பானங்கள் காபியுடன் ஒப்பிடும்போது அதிக அளவு அமிலத்தன்மை கொண்டுள்ளது. இந்த அளவு அமிலத்தன்மை கொண்ட பானங்கள் பல் அழுகுதல், ஈறு அழற்சி போன்ற பாதிப்புகளைத் தருகிறது.

​கொம்புச்சா

கொம்புச்சா என்பது ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியமான கிருமிகள் இருப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் உடல் நோயை எதிர்த்து போராட உதவுகிறது.

ஆனால் சில வகை கொம்புச்சாவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் ஆரோக்கியமான கிருமிகள் குறைந்து குறிப்பிட்ட அளவு தீர்வு கிடைப்பதில் பாதிப்பு உண்டாகிறது.

குடிக்கிற தண்ணியில இந்த பொடிய கொஞ்சம் கலந்து 15 நாள் குடிச்சா எவ்ளோ வெயிட் குறையும்னு தெரியுமா?

​பீன்ஸ் மற்றும் பயறு வகைகள்

பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் எப்போதும் ஆரோக்கியமான உணவாகவே கருதப்படுகிறது . ஆனால் இவற்றில் உள்ள பைட்டிக் அமிலம் பல் அழுகுதலுக்கு காரணமாக உள்ளது. பைட்டிக் அமிலம் ,கால்சியம் , பாஸ்போரஸ், வைட்டமின் டி , மெக்னீசியம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. மேலும் பற்கள் இந்த சத்துக்களை உறிஞ்ச கடினத்தன்மையை உருவாக்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் குறைபாடு காரணமாக பற்குழிகள் மற்றும் பல் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் உண்டாகலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்