ஆப்நகரம்

டயட்டையும் தாண்டி அதிகமாக இனிப்பு சாப்பிடும் பாலிவுட் பிரபலங்கள் யார் தெரியுமா?

ஸ்வீட் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட சிறிதாவது உண்ணுவர். இன்னும் ஒரு சிலருக்கு எப்போதும் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி எப்போதும் இனிப்பு சாப்பிட விரும்பும் பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Samayam Tamil 29 Jul 2021, 1:38 pm
ஸ்வீட் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட சிறிதாவது உண்ணுவர். இன்னும் ஒரு சிலருக்கு எப்போதும் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி எப்போதும் இனிப்பு சாப்பிட விரும்பும் பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Samayam Tamil 6 celebs who have big sugar cravings apart from their diet
டயட்டையும் தாண்டி அதிகமாக இனிப்பு சாப்பிடும் பாலிவுட் பிரபலங்கள் யார் தெரியுமா?



​பிரபலங்களுக்கு பிடித்த உணவுகள்

பிரபலங்களில் பலரும் பல விஷயங்களுக்கு அடிமையாக இருப்பார்கள். அதிலும், உணவு விஷயத்தில் சில பிரபலங்கள் சில உணவுகளுக்கு அடிமையாகி விடும். அப்படிப்பட்ட சில பிரபலங்கள் இனிப்பு சுவைக்கு எப்படி அடிமையாகி பின் அதனை எவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்கின்றனர் என்று தெரிந்து கொள்வோம் வாங்க. பிரபலங்களின் உணவு முறையை பின்பற்றும் தீவிர ரசிகர்கள் கூட இது போல் பின்பற்றி இனிப்பு உணவை குறைத்துக் கொள்ளலாம்.

​ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், ஸ்வீட் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகம் விரும்புபவர். 23 வயதான ஜான்வி கபூர், சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூட ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டு தான் இருப்பார். அவரை தொடர்ந்து பின்பற்றி வரும் ரசிகர்களுக்கு ஜான்வி ஒரு இனிப்பு விரும்பி என்று தெரியும்.

உணவுப் பிரியரான ஜான்வி கபூர், அதற்கேற்றது போல் பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய கலோரிகளை வியர்வை மூலம் வெளியேற்றி விடுவார். இவர் தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சிகள் மேற்கொள்வதை பல முறை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை நாம் பார்த்திருப்போம்.

​சாரா அலிகான்

சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் இனிப்பு பண்டங்களை அதிகம் விரும்புபவர். அவரே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், என்னால் இனிப்புகளின் மேல் உள்ள ஆசைகளை நீக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

​தீபிகா படுகோனே

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, இவருக்கு தென்னிந்திய உணவு வகைகள் மிகவும் பிடித்தம். அதிலும் குறிப்பாக, இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவுகளை மிகவும் விரும்பி உண்பார். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு உணவை அவர் எடுத்துக் கொள்வார். அதிலும், குறிப்பாக தீபிகாவுக்கு இனிப்பு உணவுகள் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன் டார்க் சாக்லெட் எடுத்துக் கொள்வதை பழக்கமாக்கி வைத்துள்ளார். இது ஆரோக்கியமானது என்றும் அவர் நம்புகிறார். இதுகுறித்து ஒரு பேட்டியில், எனக்கு என் உடலைப் பற்றித் தெரியும். ஒரு வாரம் முழுவதும் நான் இனிப்பு சாப்பிட்டால், நான் ஒரு கிலோ உடல் எடை கூடப் போகிறேன் என்று எனக்குத் தெரியும்.

​ஷில்பா ஷெட்டி குந்த்ரா

44 வயதான ஷில்பா ஷெட்டி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வருகிறார். ஆரோக்கிய உணவை பின்பற்றுவதன் மூலம் தனது இனிப்பு உணவுப் பழக்கத்தைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளார். பால் இல்லாத சைவ ஐஸ்கிரீம், தேங்காய் மற்றும் வேர்க்கடலை பார்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார். அதிலும், இனிப்பு உணவுகளில் வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும் செய்கிறார்.

​திஷா பதானி

பாலிவுட் ஹீரோயினின் சிறந்த நடிகையான திஷா பதானிக்கு, இனிப்பு உணவுகள் மிகவும் பிடிக்கும். அதிலும், திஷா பதானிக்கு சாக்லெட்டுகள் மிகவும் பிடிக்கும். அதேபோல் இனிப்பு சுவை கொண்ட ஆப்பிள் பழமும் இவருக்கு மிகவும் பிடித்த பழமாகும்.

​ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார். ரன்வீர் சிங்குக்கு மிகவும் பிடித்த சுவை இனிப்பு தான். இவர் மிகப் பெரிய ஸ்வீட் ரசிகர் என்று சொன்னால் அது தவறில்லை. இவர் ஒரு நாள் கூட சாக்லெட் சாப்பிடாமல் இருந்ததில்லை. இருப்பினும், சில படங்களில் நடிக்கும் போது கட்டுக்கோப்பான உணவு முறையை பின்பற்ற வேண்டி இருந்தால், அதற்கு ஏற்றது போல் அவர் தனது உணவு முறையை மாற்றிக் கொள்வார். நுடெல்லா சாக்லெட்டில், டார்க் சாக்லெட் சிப்ஸ் மற்றும் அவகேடோ பழத்தைக் கலந்து உண்பது ரன்வீர்க்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்