ஆப்நகரம்

பெண்கள் 30 வயதை கடக்கும்போது மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகின்றன?...

பெண்களுக்கு வயதாக வயதாக அவர்களின் மாதவிடாயும் பாதிப்படைகிறது. 30 வயதுக்கு மேல் மாதவிடாயில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்படி என்னென்ன மாற்றங்கள் உண்டாகிறது என்பதை நாம் அறிவோம்.

Samayam Tamil 13 Jan 2021, 4:54 pm
பெண்களின் வாழ்வில் மாதவிடாய் சுழற்சி என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களின் உடலானது பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதிலும் 30 வயதை கடக்கும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் பார்க்கலாம். பொதுவாக உங்கள் வயது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பாதிக்காது.
Samayam Tamil 6 things that happen to your menstrual cycle after 30s
பெண்கள் 30 வயதை கடக்கும்போது மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகின்றன?...


​மாதவிடாய் சுழற்சியில் தாக்கம்

வயதானது உங்க மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை உண்டாக்குகிறது. பெண்கள் 30 வயதை கடக்கும் போது கணிக்க கூடிய மாதவிடாய் காலத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது.

பெண்களின் வாழ்க்கை முறை, மன ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க நல்வாழ்வு ஆகியவை உங்க மாதவிடாய் சுழற்சியின் நிறைய விஷயங்களை தீர்மானிக்கிறது.

அப்படி உங்க மாதவிடாய் சுழற்சியில் உண்டாகும் 6 மாற்றங்களை பற்றி நாம் இப்பொழுது காண்போம்.

​மாதவிடாய் காலம் கடினமாக இருக்கும்

30 வயதிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள், மருத்துவ நிலைமைகள் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையின் பயன்பாட்டை நீக்குவது போன்றவை கனமான மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுக்கும். எனவே உங்க மாதவிடாய் காலங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பலனளிக்கும்.

​அதிகரித்த வலி மற்றும் அசெளகரியம் உண்டாதல்

மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுதல் உங்களுக்கு எண்டோமெட்ரியோசிஸை ஏற்படுத்துகிறது. இது கருப்பை புறணிக்கு தொடர்புடைய கோளாறு மற்றும் நிறைய வலிகளை ஏற்படுத்துகிறது. 20-30 க்கு அப்புறம் பெண்கள் இந்த மாதிரியான பிரச்சினையை சந்திக்கின்றனர். கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போன்ற பிற பிரச்சினைகளால் இது ஏற்படலாம் என மகப்பேறியியல் மருத்துவர் எச்சரிக்கிறார்.

​மாதவிடாய் காலத்தை இழத்தல்

பெண்கள் சில பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை பயன்படுத்தும் போது மாதவிடாய் காலத்தை தவற விடுகின்றனர். பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது இலகுவான மற்றும் தவறவிட்ட காலங்களுக்கு வழி வகுக்கும்.

​மனநிலை மாற்றங்கள் எல்லா நேரத்திலும் உயரக் கூடும்

பெண்கள் 30 யை அடையும் போது அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கிறோம். உடல் செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நமது ஹார்மோன்களைப் பாதிக்கிறது. பி. எம். எஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் அறிகுறிகள் மேலும் மோசமடையக்கூடும். உங்கள் பிஎம்எஸ் அறிகுறிகள் மோசமடையத் தொடங்குவதற்கான மற்றொரு காரணம், உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் குறைகிறது.

​கர்ப்பம் காரணமாக நீங்கள் மாற்றங்களை சந்திக்க நேரிடும்

பல பெண்கள் தங்கள் 30 வயதில் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். கர்ப்பம் ஆனது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பெரிய அளவில் பாதிக்கிறது. ஏனெனில் மாதவிடாய் காலங்கள் தாய்ப்பாலுடன் நெருங்கிய தொடர்புடையது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதை நிறுத்தும் வரை தங்களுடைய மாதவிடாய் காலத்தை பெற முடியாது. மேலும் பிரசவத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் பி. எம். எஸ் அறிகுறிகள் மாற வாய்ப்பு உள்ளது. பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை வாய்ப் திறப்பு அளவு அதிகரிக்கிறது, ஆகவே, காலங்களில் கருப்பைச் சுருக்கம் லேசானதாக இருக்கலாம் என மகப்பேறியியல் மருத்துவர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்