ஆப்நகரம்

weight loss diet: ஆலியா பட் இந்த சிறுதானியத்தை அதிகமாக சாப்பிட்டுதான் உடல் எடையை குறைத்திருக்கிறார்

அந்தவகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் அவர்கள் தன்னுடைய உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளுடன், கம்பு மற்றும் ராகி போன்ற தானிய டயட்டை மேற்கொண்டு வருகிறார். இந்த டயட் எந்தளவுக்கு அவருக்கு உதவியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 27 Nov 2021, 11:48 am
பொதுவாக ஒவ்வொரு செலிபிரிட்டிகளும் தங்கள் உடல் எடையை பராமரிக்க வித விதமான டயட் முறைகளை பின்பற்றி வருவது உண்டு. பாலிவுட்டில் பிரபல நடிகையான ஆலியா பட் அவர்கள் அவரது உடல் எடையை பராமரிப்பதில் மிகவும் கவனமானவர். அவர் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுக்கே முன்னுரிமை கொடுக்கக் கூடியவர். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒரு ஸ்பூன் நெய், கிச்சடி மற்றும் பருப்பு போன்றவை அடங்கும். அவர் தற்போது அவருடைய எடை இழப்பு பயணத்தை மேற்கொண்டு 20 கிலோ வரை எடையை இழந்து உள்ளார்.
Samayam Tamil alia bhat fitness secret bajra millet for weight loss
weight loss diet: ஆலியா பட் இந்த சிறுதானியத்தை அதிகமாக சாப்பிட்டுதான் உடல் எடையை குறைத்திருக்கிறார்


​ஆலியா பட் ஃபிட்னஸ்

ஆலியா பட் அவர்கள் அவருடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அவர் ஒரு நடிகையாக ஆசைப்பட்ட போது 6 மாதங்களுக்குள் 20 கிலோ எடை வரை இழந்துள்ளார். 2012 ல் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளார். டியர் ஜிந்தகி,’ ‘குல் பாய்,’ மற்றும் ‘ராசி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் கதாநாயகி நடித்து பாலிவுட் திரையுலகில் தனக்கென்ற இடத்தை பெற்றவர்.

சரி ஆலியா பட் எப்படி தன்னுடைய உடல் எடையை பராமரித்து வருகிறார் அதற்கான டயட் முறைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

​பின்பற்றும் டயட்

ஆலியா பட் டயட் முறையை பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுகையில் கம்பு, ராகி போன்ற தானியங்களை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்வார் அவர் என்று கூறியுள்ளார். மேலும் பருவ கால பழங்கள், மூலிகை தேநீர், முட்டை மற்றும் சில ஆரோக்கியமான சிற்றுண்டி களை ஆலியா பட் தன் உணவில் சேர்த்துக் கொள்வார்.

ஆர்கானிக் பால், லஸ்ஸி மற்றும் சாஸ் ஆகியவை ஆலியா பட்டுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஒரு ஸ்பூன் நெய், பருப்பு மற்றும் தயிர் சாதம், கிச்சடியையும் அவர் விரும்பி சாப்பிடுவார்.

​உடற்பயிற்சி முறை :

ஆலியா பட் வழக்கமான உடற்பயிற்சி பழக்கத்தை கொண்டு இருப்பவர். அவருடைய வொர்க் அவுட்டில் முக்கியமாக கிக் பாக்ஸிங், டெட்லிஃப்டிங் மற்றும் மேலும் சில முக்கிய உடற்பயிற்சிகள் இடம் பெறுகின்றன. ஜிம்மிற்கு செல்வதோடு மட்டுமல்லாமல் ஆலியா பட் யோகா பயிற்சியையும் செய்து வருகிறார். அவ்வப்போது அவர் செய்யும் யோகா பயிற்சி புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

​கம்பு சாப்பிடுவதன் பயன்கள்

கம்பு உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற கருத்து உண்டு. அது ஒருவகையில் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கவும் பயன்படுகிறது. இந்த கம்பினை உங்களுடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் கீழ்கண்ட பயன்களைப் பெற முடியும்.

  • கொலஸ்ட்டிராலைக் கட்டுப்படுத்துகிறது.
  • ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
  • உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
  • வைட்டமின் பி நிறைந்த இந்த உணவால் தசை வலிமை அதிகரிக்கும்.
  • ஆஸ்துமா, புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
  • கம்பு ஒரு குளூட்டன் ஃப்ரீ உணவு.
  • இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

​கம்பில் உள்ள ஊட்டச்சத்துகள்

சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. 100 கிராம் கம்பில் கிட்டதட்ட 361 கலோரிகள் இருக்கின்றன. அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கியிருக்கின்றன என்று பார்ப்போம்.

  • கார்போஹைட்ரேட் - 67.5 கிராம்
  • புரதச்சத்து - 11.6 கிராம்
  • பாஸ்பரஸ் - 296 மி.கிராம்
  • மக்னீசியம் - 137 மி.கிராம்
  • பொட்டாசியம் - 307 மி.கிராம்
  • இரும்புச்சத்து - 8.0 மி.கிராம்
  • கால்சியம் - 42 மி.கிராம்
  • கரோட்டீன் - 132 மி.கிராம்
  • கரையும் நீர்ச்சத்துக்கள் - 11.3 மி.கிராம்
  • அமினோ அமிலங்கள் - 1.86 மி.கிராம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்