ஆப்நகரம்

தங்கம் மாதிரி ஜொலிக்க பசுவின் கோமியம் போதுமே!

பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள்.

TNN 31 Mar 2017, 4:44 pm
பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள்.
Samayam Tamil beauty tips for womens using natural methods
தங்கம் மாதிரி ஜொலிக்க பசுவின் கோமியம் போதுமே!


இது பல நேரங்களில் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாகும். இதற்கு மாறாக இயற்கை முறையிலே பசுவின் பால், கோமியம் மற்றும் சாணத்தை முகத்துக்கு பயன்படுத்தினால் முகம் ஜொலிக்கும் என குஜராத்தின் பசு பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், எகிப்திய பேரழகி கிளியோபட்ரா கூட இதை பயன்படுத்தி தான் பேரழகியாக வலம் வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை பயன்படுத்தும் முறை:

முதலில் பசுவின் பாலை எடுத்து பெண்கள் தங்களது முகத்தில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

அதேபோல், பசு நெய் மற்றும் மஞ்சள் பொடியை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் பசுவின் கோமியத்தை எடுத்து 15 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

இறுதியில் கடைகளில் செம்மைப்படுத்தி விற்கப்படும் பசுவின் சாணத்தை முகத்தில் பூச வேண்டும்.

பின்னர் வேப்ப இலை கலந்த தண்ணீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் தங்க சிலை போல் ஜொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்