ஆப்நகரம்

10 வகை நாட்டுகாய்களும் அதை பயன்படுத்தும் முறையும்! மரபு நிபுணர் சொல்லும் ஆரோக்கிய குறிப்பு!


காய்கறிகள் எப்போதுமே உடலுக்கு நன்மை செய்யகூடியவை. அதிலும் பாரம்பரியமாக நமது மரபு வழியில் பயிரிடப்படும் காய்கறிகள் உடலுக்கு மேலும் நன்மை செய்யகூடியவை. அப்படியான காய்கறிகள் என்ன? எப்படி எடுக்க வேண்டும் என்பது மரபு உணவு, வாழ்வியல் ஆலோசகர் நல்ல சோறு இராஜமுருகன் சொல்வதை கேட்கலாம்.

Samayam Tamil 15 Apr 2021, 10:09 pm
Samayam Tamil benefits and uses of traditional vegetables in tamil
10 வகை நாட்டுகாய்களும் அதை பயன்படுத்தும் முறையும்! மரபு நிபுணர் சொல்லும் ஆரோக்கிய குறிப்பு!

நமது உணவு பொருள்கள் பாரம்பரியமாக நம்மிடம் விளையும் பொருள்களை நாமே பயன்படுத்துகிறோமா என்பது தான். நமது ஊரில் விளையும் பொருள்களை நாமே பயன்படுத்தும் போது நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும். இதன்மூலம் நமது மக்கள் வாழும் சுற்றுச்சூழல், சமூகம், உடல்நலம், பொருளாதாரம் என எல்லாமே சிறப்பாக இருக்கும். சீராகவும் இருக்கும்.

இதன் அடிப்படையில் தான் நமது முன்னோர்கள் வாழ்வியல் முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் தந்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் இப்போது நாம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியிருக்கிறோம். நமது உள்ளூரில் விளையும் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உணவுகளை எடுத்துகொள்கிறோம். அதில் தான் நாம் கவனம் செலுத்துகிறோம்.

இதனால் நமது உடல் ஆரோக்கியம் சீர்கெட்டு பலவிதமான உடல் உபாதைகளை சந்திக்க செய்கிறோம் என்று சொல்லலாம். இதிலிருந்து மாற்றங்களை பெற விரும்பினால் முதலில் நமது நாட்டு காய்கறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

​நாட்டு காய்கறிகள்

நாட்டு காய்கறிகள் என்பது பாரம்பரியாமாக காலங்காலமாக நாம் பயிர் செய்யும் காய்கறிகள். நாம் பயிரிடும் காய்கறிகளிலிருந்து விதைகளை எடுத்து மீண்டும் பயிரிடுவதுதான். இந்த வகையில் பலவகையான காய்கறிகள் உண்டு. அதில் சில வகையான காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.

​புடலங்காய்

இதில் மூன்று வகை உண்டு. பாம்பு புடலை, பேய் புடலை இது கசப்புத்தன்மை வாய்ந்தது இதை சமைக்க முடியாது, மற்றொன்று பன்றி புடலை, குட்டை புடலை என்று சொல்லகூடியது. இதை தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இது வாதத்தை கூட்டி விடும். உணவில் புடலை என்றால் நாம் பாம்பு புடலையை தான் பயன்படுத்த வேண்டும். இதுதான் ஆரோக்கியமானது.

பாகற்காய்

பாகற்காயில் பல வகை உண்டு. இதில் குறிப்பிடத்தக்க பாவற்காய் என்றால் அது கொம்பு பாகல் தான். இதைதான் அதிகம் பயன்படுத்துகிறோம். உருண்டையாக நீளமாக ஒரே மாதிரி இருக்கும். அடுத்தது குருவித்தலை பாகல். இதுவும் கொம்பு பாகல் போன்றுதான். இதையும் பந்தல் போட்டுதான் படரவிடுகிறோம். இது காம்பு பகுதியில் அதிகமாகவும் வால் பகுதியில் குறுகியும் குருவித்தலை போன்று இருக்கும்.


அடுத்தது பழுபாகல். இது குருவித்தலை போன்று அடுத்த வகையை சேர்ந்தது இல்லாமல் ஒரே அளவில் இருக்கும். அடுத்தது மிதி பாகல். இது கொடியில் தரையில் படரகூடியது. இதை கால்களில் படும் போதுதான் இதை கண்டறியமுடியும். அதனால் தான் இது மிதிபாகல் என்றழைக்கப்படுகிறது.


தொற்றுநோய் : நுரையீரலுக்கும், சீரான சுவாசத்துக்கும் நன்மை செய்யும் உணவுகள், இன்னிக்கே சாப்பிடுங்க!


அதலக்காய் உடலில் இருக்கும் கெட்ட வாயுவை நீக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆனால் கர்ப்பிணிகள் இதை எடுத்துகொள்ளும் போது கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. அதே நேரம் மாதவிடாய் காலத்துக்கு பின்பு வரும் உபாதைகளை குறைக்கவும் செய்யும்.


பாகற்காய் நிறைய வகைகள் உண்டு என்றாலும் இதை உணவாக எடுத்துகொள்ளும் முறைகள் உண்டு. இதை சமைக்கும் போது புளி சேர்த்து எடுப்பதால் இதனுடைய தன்மை இன்னும் கூடுதலாக கிடைக்கும். இது கசப்பு சுவை என்பதால் நீரிழிவு இருப்பவர்கள் அதிகமாக எடுத்துகொள்வது. அல்லது இதை அரைத்து சாறாக்கி குடிப்பது நல்ல முறை கிடையாது. ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய பாகற்காய் சாறு குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சிலர் தினமும் கூட இதை குடிப்பது உண்டு.

​பீர்க்கங்காய்

அரை அடி முதல் ஒரு அடிக்குள் வளரும் பீர்க்கன் நாட்டு பீர்க்கங்காய் ஆகும். இளம்பச்சை நிறத்தில் நீண்டதாக இருக்கும் பீர்க்கன் நாட்டு பீர்க்கனாக இருக்காது. பீர்க்கனில் பேய் பீர்க்கன் வகையானது அதிக கசப்புத்தன்மை கொடுக்க கூடியது. இது மருத்துவத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இதை உணவுக்காக பயன்படுத்த முடியாது. அடுத்தது நுரை பீர்க்கன், மெழுகு பீர்க்கன் இதை உணவில் சேர்த்துவருகிறோம்.

​சுரக்காய்

சுரக்காயில் இருக்கும் தன்மையை பொறுத்து அது சட்டி சுரை, கிண்ணம் சுரை, பாம்பு சுரை என்று பிரிக்கப்படுகிறது. இது உணவில் எடுக்கும் போது உடலில் இருக்கும் நீர்ச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இது உடலில் நீரிழப்பு இல்லாமல் வைக்க உதவுகிறது.

​தட்டக்காய் அல்லது காராமணி

தட்டக்காயை இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள். தட்டை பயறு முற்றுவதற்கு முன்பு இதை பொரியலாக்கி சாப்பிடுவார்கள். இந்த வகை உணவு முறைகள் எல்லாமே நமது சுற்றுச்சூழலை பொறுத்து கிடைப்பதாகும்.

​வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பச்சை, சிவப்பு, வெண் வெண்டை என இருக்கும். இவை நாட்டு வெண்டைக்காயாக இருந்தால் நீளமாக குட்டையாக இருக்கும். இவை அல்லாத வெண்டைக்காய் ஹைப்ரெட் ஆக இருந்தால் அது உடலில் வாதத்தை கூட்டும்.

​அவரைக்காய்

அவரைக்காய் பிஞ்சு வகையாக இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அதிகமாக முற்றிய பிறகு அதை பயன்படுத்தகூடாது. உள்ளிருக்கும் கொட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மாதிரி காய்கறிகளை அதன் தன்மைக்கேற்ப எடுக்க வேண்டும்.

பூசணிக்காய்

பூசணிக்காயில் வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி. மஞ்சள் பூசணி தான் சர்க்கரை பூசணி அரசாணிக்காய், பரங்கிக்காய் என்று அழைக்கபப்டுகிறது. வெள்ளை பூசணியை உடலில் நீரின் தன்மையை சமநிலைப்படுத்துகிறது. மஞ்சள் பூசணி வயிற்றுப்புண்ணை குறைகக் செய்யும்.

சுண்டக்காய்

சுண்டக்காய் நாட்டு சுண்டக்காய், மலை சுண்டக்காய் இரண்டும் உடலுக்கு சூட்டை கொடுக்கும். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றும்.

​கத்திரிக்காய்

மூக்குத்தி கத்திரிக்காய், சாதராணமான கத்திரிக்காய். இவை எல்லாமே விதை முற்றுவதற்கு முன்பு தான் கத்திரிக்காயை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இது உடலில் தோல் அரிப்பை உண்டாக்க செய்யும். அல்லத் உடல் உபாதை இருப்பவர்களுக்கு அதிகரிக்க செய்யும்.


வைட்டமின் பி 6 குறைபாடு இருந்தால் நோய்த்தொற்று எளிதில் தாக்குமாம், இதன் நன்மைகளும் அறிவோம்!


இப்படி நாட்டு காய்கறிகளை சரியான முறையில் எடுத்துகொண்டால் உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்