ஆப்நகரம்

neem benefits: வேப்பிலையை மருந்தாக எப்படி பயன்படுத்த வேண்டும்? மருத்துவர் கூறும் வழிமுறைகள் இதோ...

வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஊட்டச்சத்து மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் திருமதி. பிரதீபா சரவணன் விளக்குகிறார்.

Samayam Tamil 29 Nov 2021, 9:05 am
வேப்பிலை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருப்போம். இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை எனலாம். ஏனெனில் அந்த அளவுக்கு இதன் மருத்துவ பண்புகள் ஏராளம். அதனால் தான் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எந்தவொரு உடல் நல பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றாலும் வேப்பிலையை நாடுவது உண்டு. எனவே இதைக் கொண்டு நம் சரும பிரச்சனைகள் முதல் உடல்நல பாதிப்புகள் வரை நம்மால் சரிசெய்ய முடியும்.
Samayam Tamil benefits and ways to use neem
neem benefits: வேப்பிலையை மருந்தாக எப்படி பயன்படுத்த வேண்டும்? மருத்துவர் கூறும் வழிமுறைகள் இதோ...


​சருமப் பிரச்சினைகள் தீர

சரும பிரச்சினைகள் மற்றும் உடல் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் போக்கக் கூடியது. வேப்பிலையில் கிட்டத்தட்ட 130-140 பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆன்டி மைக்ரோ நியூட்ரியன்ட்கள் போன்றவை காயங்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.

வேப்பிலை பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் எக்ஸிமா, சொரியாஸிஸ் போன்ற சரும பிரச்சனைகளை போக்க ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது.

​மருத்துவர் கூறும் ஆலோசனை

சரி வாங்க இவ்வளவு நன்மைகள் தரும் வேப்பிலையை நாம் எல்லாரும் பயன்படுத்தலாமா எந்தளவுக்கு பயன்படுத்த வேண்டும் போன்ற விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை. ஏனெனில் அளவுக்கு அதிகமாக வேப்பிலையை பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எந்தளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் திருமதி. பிரதீபா சரவணன் அவர்கள்.

வயசானாலும் இளமையாகவே வைத்திருக்கும் கொலாஜன் இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்...

​கரு கலைய வாய்ப்புண்டு

வேப்பிலையில் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதால் இதை எல்லாரும் பயன்படுத்தலாமா என்றால் வேப்பிலையை கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரை பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல் உங்களுக்கு பக்க விளைவுகள் உண்டாக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த வேப்பிலையை நீங்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது குழந்தை பேற்றை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு நிதர்சனமான உண்மை ஆகும்.

வேண்டுமானால் இதை வேப்பிலை தண்ணீராக நாம் பயன்படுத்தி வரலாம். இதை தொடர்ச்சியாக இல்லாமல் மருத்துவர் கூறும் அளவுக்கு பயன்படுத்தி வருவது பாதுகாப்பான ஒன்று.

நிலவேம்பு டெங்குக்கு மட்டும் மருந்தில்லை... இத்தனை நோயையும் சரிபண்ணும்...

​வேப்ப எண்ணெய்

வேப்பிலை எண்ணெய்யை சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக நாம் பயன்படுத்தி வரலாம். ஏனெனில் வேப்பிலையில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்திற்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

Youtube-How To Use Neem As A Health Remedy | வேப்ப இலையை மருந்துவ குறிப்பாக எப்படி பயன்படுத்த வேண்டும்?

​யார் பயன்படுதக் கூடாது

வேப்பிலை எண்ணெய்யை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது அது ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி கருவுற்ற பெண்கள் இதை பயன்படுத்தக் கூடாது.

குழந்தைகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போதும் சில பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இந்த வேப்பிலையை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன்களை நீங்கள் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்