ஆப்நகரம்

தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டு வைத்தால் என்னவாகும்?

எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது அறிந்த விஷயம்தான். அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் என்ன நடக்கும்ன்னு பார்க்கலாம் வாங்க.

TOI Contributor 20 Mar 2017, 5:58 pm
எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது அறிந்த விஷயம்தான். அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் என்ன நடக்கும்ன்னு பார்க்கலாம் வாங்க.
Samayam Tamil benefits of lemon at bedside at night
தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டு வைத்தால் என்னவாகும்?


* மூக்கடைப்பு பிரச்சனைகள் இருந்தால், தூக்கமின்மை ஏற்படும். இதைத்தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.

* எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.

* இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.

* எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.

* எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.

* இரவு முழுவதும் எலுமிச்சை காற்றை சுவாசிப்பதால் மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரலாம்.

* எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.

benefits of lemon at bedside at night

அடுத்த செய்தி

டிரெண்டிங்