ஆப்நகரம்

கர்ப்பிணி பெண்கள் காஃபி குடித்தால் குழந்தை அதிக எடையுடன் பிறக்கும்!

கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் காஃபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 13 May 2018, 4:24 pm
கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் காஃபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Samayam Tamil pregnant-woman-drinking-coffee.jpg.838x0_q80
கர்ப்பிணி பெண்கள் காஃபி குடித்தால் குழந்தை அதிக எடையுடன் பிறக்கும்!


கர்ப்பிணி பெண்கள் காஃபி அருந்துவது குறித்து, சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலை கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.

50 ஆயிரத்து 943 கர்ப்பிணி பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, உலக அளவில் கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக கூறப்படுகிறது.

அதில் அதிகமாக காஃபி அருந்தும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக அல்லது குண்டானவர்களாக இருக்க கூடும் என்ற தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

குறைவாக காபீன் எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபீன் எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்பொழுது குண்டாகும் சாத்தியம் உள்ளது.அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கின்றது. இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர்.

எனவே, ஒரு நாளைக்கு 300 மி.கிராம் அளவிற்கு கூடுதலான காபீனை கர்ப்பிணி பெண்கள் எடுக்க கூடாது என சுவீடனின் தேசிய உணவு கழகம் தெரிவித்துள்ளது.இது 3 கோப்பை காபி அல்லது 6 கோப்பை பிளாக் டீ ஆகியவை எடுப்பதற்கு சமம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்