ஆப்நகரம்

அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்!


அசைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டவர்கள் கூட சைவத்துக்கு மாறி வருகிறார்கள். சைவ உணவில் அவர்கள் எடுத்துகொள்ளும் உணவுகள் உண்மையில் பலன் அளிக்கிறதா என்பதை அறிவது அவசியம்.

Samayam Tamil 29 Oct 2020, 7:39 pm
Samayam Tamil common mistakes when you convert to pure vegetarian
அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்!

அசைவ உணவுகளை குறைவாக எடுத்துகொண்டாலும் அதிகமாக எடுத்துகொண்டாலும் அவை ஆரோக்கிய நன்மைகளுக்கு உத்திரவாதம் அளிக்காது. அதே நேரம் சைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்கவும், உடலை நோய் அண்டாமல் இருக்கவும், ஆயுள் அதிகரிக்கவும் சிறந்த உணவு முறை சைவ உணவு முறை. ஆனால் சைவ உணவை பின்பற்றுபவர்கள் உணவில் செய்யும் பொதுவான தவறுகள் உடல் ஆரோக்கியத்தை மட்டுப்படுத்திவிட செய்யும். என்னென்ன வகையான தவறுகளை செய்கிறோம் என்று பார்க்கலாம்.

வளரும் பருவம் முதல் இறைச்சிகளை அதிகம் அல்லது அவ்வபோது உணவில் சேர்த்து வந்தவர்கள் திடீரென்று அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறுவதுண்டு. அப்படி சைவத்துக்கு மாறும் போது முன்பு அசைவம் மூலம் கிடைத்த சத்து இப்போதும் தடையில்லாமல் கிடைக்கும் படி உணவு எடுத்துகொள்ள வேண்டும். தாவர அடிப்படையிலான உணவில் புரதங்கள் நிறைந்திருக்கிறது. இதை உணவில் சேர்க்க முயற்சித்தாலும் சில தவறுகள் செய்கிறோம்.

​குறைவான புரதங்கள்

இறைச்சியில் இருப்பதை காட்டிலும் குறைவான புரதங்களே மற்ற உணவுகளில் உள்ளது. இறைச்சி புரதச்சத்து நிறைந்த மூலம். மேலும் இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி போன்ற ஊட்டச்சத்துகளும் உண்டு. இவை அனைத்தையும் சைவ உணவில் பெற வேண்டும் என்றால் நீங்கள் தேர்வு செய்யும் உணவுகளும் சிறந்ததாக இருக்க வேண்டும்.


ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய சில உண்மைகள்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை


அன்றாடம் உங்கள் உணவில் அதிக சேர்க்கையாக பின்வருவனவற்றுள் இவை இருக்க வேண்டும். பீன்ஸ் வகைகள், பயறு வகைகள் புரத மூலங்கள் நிறைந்தவை, சோயா உணவுகள், கொட்டைகள், வேர்க்கடலை வெண்ணெய்,விதைகள், ஓட்மீல். தானியங்கள், முளைகட்டிய தானியங்கள் என உங்கள் தட்டுகளில் இதில் பலவும் நிறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இதர சத்துகள் கிடைக்கும்.

​பதப்படுத்தப்பட்ட போலி இறைச்சி

தாவர அடிப்படையில் தயாரிக்கப்படும் பர்கர்கள், கொத்துக்கறி அல்லது இறைச்சியை போல் அல்லாமல் பலவிதமான தேர்வுகளை செய்து சுவைக்கலாம். இறைச்சிக்கு மாற்றான போலி இறைச்சி சுவையை இவை அளிக்கும் என்றாலும் இது அதிகளவு பதப்படுத்தப்படுகிறது. அதிகமாக பதப்படுத்தப்படும் உணவுகள் அப்பொருள்களில் இருக்கும் ஊட்டச்சத்தை இழந்துவிடுகிறது.


அப்பொருளின் சத்து தன்மை மாறிவிடுகிறது. இதனால் சைவ பர்கர் வழியாக தாவரங்கள் அடங்கிய சத்தான உணவு பொருள்கள் உடலுக்கு சேர்வதாக நினைத்தால் அது நிச்சயம் உங்கள் ஊட்டச்சத்தில் முன்னேற்றத்தை கொடுக்காது.

​அதிகளவு சீஸ்

அசைவ உணவுக்கு இணையாக புரதம் பெறுவதற்கு சீஸ் உணவு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால் இது அதிகமாக எடுக்கும் போது நிறைவுற்ற கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். அதனால் உங்கள் உடலுக்கு தேவையான புரதத்தை அதிகரிக்க தாவரங்களிலிருந்து பெறப்படும் புரதம் நிறைந்த உணவை அதிகம் சேர்க்கலாம்.


அதே போன்று உங்களின் சுவைக்கு சிறிய அளவில் சீஸ் சேர்க்கலாம். அதே போன்று முந்திரி, கொண்டைக்கடலையில் தயாரிக்கப்படும் ஹம்மூஸ், நட்ஸ் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாஸ் வகைகளை அதிகம் எடுத்து கொள்வதன் மூலம் கொழுப்பு இல்லாத புரதம் நிறைவாக கிடைக்கும்.

​ஒரே உணவு

சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் உணவு நிரம்பிய தட்டை கவனியுங்கள். கண்ணை பறிக்கும் வகையில் வண்ணங்கள் இருக்கும் உணவுகள் ஆரோக்கியத்தின் முதல் படியாக இருக்கலாம். விதவிதமான வண்ணங்களில் இருந்து நீங்கள் பெறும் தாவர கலவைகளிலிருந்து பெறும் உணவுகள் அதிக பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்தவை.


அதனால் வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் உங்கள் தட்டில் நிறைந்திருக்கட்டும். உங்கள் உணவு பாஸ்தா, ரொட்டி, கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருந்தால் அதற்கு இணையான நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்த உணவை தேர்வு செய்வதும் அவசியம்.

​காய்கறிகள் குறைவு

சைவ உணவை எடுப்பவர்கள் அதிக அளவு தாவர உணவை சேர்க்க வெண்டும். ஆனால் யாரும் இதை பின்பற்றுவதில்லை. இதை கடைபிடிக்க எளிதான காரியம் ஒன்று உண்டு. நீங்கள் தாவர உணவில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை காட்டிலும் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம்.


தட்டு நிறைய அரிசி உணவையும் சிறிதளவு காய்கறிகளையும் வைத்திருந்தால் இனி இதை மாற்றிகொள்ளுங்கள். இப்போது தட்டு நிறைய காய்கறிகளையும் அதன் மேல் சிறிதளவு அரிசி உணவையும் வைத்துகொள்ளுங்கள்.


முட்டையை ஃப்ரிட்ஜ்ஜுக்கு வைக்கலாமா? வைக்க கூடாதா?


நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். பாஸ்தாவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் 50 % காய்கறிகள் கலந்திருக்க வேண்டும். அரிசி, பாஸ்தா, ரொட்டி என எதுவாக இருந்தாலும் அதனுடன் சம அளவு அல்லது அதற்கும் மேல் சுரைக்காய், கேரட், காலிஃப்ளவர், ப்ரக்கோலி என எதுவாக இருந்தாலும் சம அளவு இருக்கட்டும். அப்போதுதான் உங்கள் உடல் சைவ உணவு முறையில் போதுமான சத்தை பெறக்கூடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்