ஆப்நகரம்

world kidney day 2020: இந்த 5 அறிகுறி இருந்தா உங்க கிட்னி பாதி காலினு அர்த்தம்...

சிறுநீரகக் கற்கள் வந்து, வலி தாங்க முடியாமல் வயிற்று வலி அதிகமாகி டாக்டரிடம் சென்றால் தான் கிட்னியில் கல் என்று தெரியும். அதுவரைக்கும் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் எந்த பிரச்சினைக்கும் சில அறிகுறிகள் தெரியும். அப்படி உங்களுக்கு கிட்னியில் கல் இருக்கிறதென்றால், அதை எந்தெந்த அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று பார்க்கலாம்.

Samayam Tamil 12 Mar 2020, 2:06 pm
சிறுநீரகம் நம்முடைய உடலில் உள்ள மிக முக்கியமான பாகங்களில் ஒன்று என்றும் அதன் செயல்பாடு குறையத் தொடங்கினால் எவ்வளவு பிரச்சினைகள் உண்டாகும் என்பது நமக்குத் தெரியும். சிறுநீரகத்தின் செயல்பாடு நிற்கத் தொடங்கினால், எவ்வளவு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற தீவிரத்தை நாம் புரிந்து கொள்வதே இல்லை. ஆனால் நம்முடைய சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதன் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறையோடும் இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் மார்ச் 12 ஆம் நாள் சர்வதேச சிறுநீரக தினமாகக் (world kidney day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுநீரகம் செயல்பாடு குறைவதற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அவற்றை எப்படி பாதுகாப்பது போன்ற விஷயங்களைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
Samayam Tamil common symptoms and diagnose of kidney damage you must know
world kidney day 2020: இந்த 5 அறிகுறி இருந்தா உங்க கிட்னி பாதி காலினு அர்த்தம்...


​கிட்னி செயல்பாடு

சிறுநீரகப் பிரச்சினைகளில் அதிக பேருக்கு உண்டாகிற குழப்பமும் பிரச்சினையும் என்னவென்றால், அது சிறுநீரகக் கற்கள் பற்றியது தான். கற்கள் பிரச்சனை என்பது வலி மிகுந்த ஒன்றாகும். உங்களைச் சுற்றியுள்ள நிறைய பேர்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் போது அவர்களின் உடல் பல அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்த சிறுநீரக கற்கள் வலி பிரசவ வலியை விட வலி மிகுந்ததாக உணரப்படுகிறது. அடிவயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் வெளியேற முடியாமல் தவிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கீழ்க்கண்ட 5 பொதுவான அறிகுறிகளைக் கொண்டு இதைக் கொஞ்சம் முன்னரே கண்டறிய முடியும். இதில் நிறைய பேருக்கு என்ன சந்தேகம் இருக்குமென்றால், சிறுநீரகக் கற்கள் ஆண்களுக்கு மட்டும் தான் வரும். பெண்களுக்கு வராது என்று சொல்வதுண்டு. ஆனால் அப்படியல்ல. ஆண், பெண் இருவருக்குமே இந்த சிறுநீரகக் கற்கள் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் ஆண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம்.

​செயல்பாடு குறைந்தால்...

முதுகு, தொப்பை, பக்கவாட்டில் கடுமையான வலி ஏற்படுதல், சிறுநீர் பாதை குறுகலாக இருப்பதால் அதன் வழியாக கற்கள் வெளியேற முடியாமல் திணறும் போது ஒருவர் கடுமையான வலியை உணர்கிறார். இதனால் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இப்படி சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக மூளைக்கு சிக்னல் செல்கிறது. ஒரு நபர் முதுகிலும், விலா எலும்புகளுக்குக் கீழும், உள் பக்கங்களிலும் கடுமையான வலியை உணருகிறார். இதுவே சிறுநீரகக் கற்கள் பெரிதாக இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கத்தைக் கூட ஏற்படுத்தக் கூடும்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரகக் கற்கள் தொடங்கி, கிட்னி செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

​சிறுநீர் வெளியேறும் போது வலித்தல்

நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அடிக்கடி எரிச்சல் இருந்தால் அது சிறுநீரகக் கற்களின் அறிகுறியாகக் கூட இருக்கும். சிறுநீர் வடிகுழாய்க்கும் சிறுநீர்ப் பைக்கும் இடையே சிறுநீர்க் கற்கள் மாட்டும் போது தீவிர வலி ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் வலி சிறுநீர் பாதைத் தொற்று என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. சிறுநீரகக் கற்கள் இருந்தாலும் கூட, சிறுநீர் கழிக்கும்போது மிகக் கடுமையான வலி இருக்கும்.

வெயில் காலம் தொடங்கியதும் பொதுவாக உடல் சூட்டின் காரணமாகவும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு ஏற்படுவதுண்டு. ஆனால் அடிக்கடி இது தொடர்ந்து கொண்டிருக்கக் கூடாது. சிறுநீர் கடுகடுப்பு, வலி போன்றவற்றை அலட்சியம் செய்யாதீர்கள். போதிய அளவு தண்ணீர் குடியுங்கள்.

​நிறங்களை வைத்து கண்டுபிடிக்கலாமா?

சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது சிறுநீரகக் கற்களின் அடித்த அறிகுறியாகும். எனவே உங்கள் சிறுநீரில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பருவ காலங்களுக்கு ஏற்பவும் நோய்க் குறிகளைப் பொருத்தும் நம்முடைய சிறுநீரின் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதுபோல தான் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அது உங்களுடைய சிறுநீரில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதை வைத்தும் நீங்கள் எளிதாக சிறுநீரகக் கல் உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும்.

சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால், அவர்களுக்கு கல்லீரலிலும் பிரச்சினை இருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மஞ்சள் காமாலை அவர்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

​அடிக்கடி சிறுநீர் கழித்தல்

பெரிய சிறுநீரகக் கற்கள் சிறுநீர் வெளியேற்றத்தில் சிக்கிக் கொள்ளும் போது சிறுநீர் வரும் உணர்வை தரும். இதனால் நீங்கள் அடிக்கடி பாத்ரூம்க்கு செல்ல நேரிடும். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகமாக தாகம் எடுக்கும். அதேபோல் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள். அதே போல தான் சிறுநீரகக் கற்களால் அவதிப்படும் போதும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.

நீரிழிவு நோயாளிகள் தான் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்ற ஒரு தவறான கருத்தும் நம்மிடையே பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதுமட்டுமே உண்மை கிடையாது. உங்களுடைய சிறுநீரகத்தின் செயல்பாடுகள் தாமதமாகின்ற பொழுது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுவதும், சொட்டு சொட்டாக சிறுநீர் வலியுடன் வெளியேறுவது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

​அடிக்கடி குமட்டல்

சிறுநீரகக் கற்களால் அடிவயிற்றில் வலி ஏற்படும் போது குமட்டலும் வாந்தியும் சேர்ந்தே வந்து விடும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் வயிற்றுப் பகுதியில் உள்ள நரம்புகளும் சிறுநீரக பாதை நரம்புகளும் ஒருங்கே பிணைக்கப்பட்டு இருப்பதே காரணமாக அமைகிறது. பொதுவாக வாந்தி மற்றும் குமட்டல் வந்தால், சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்றோ அல்லது பித்தம் என்றோ நினைத்து அப்படியே விட்டு விடுவோம். ஆனால் அடுத்தமுறை இப்படி அறிகுறிகள் வந்தால் அப்படியே விட்டு விடாதீர்கள்.

செரிமானக் கோளாறு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். புளிப்பான ஏப்பம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வெறும் அஜீரணக் கோளாறாக மட்டும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சிறுநீரகத்தில் பிரச்சினை என்றும் பயப்படத் தேவையில்லை. ஆனால் உங்களுடைய குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை மட்டுமாவது பெற்றுக் கொள்ளலாம் தானே.

​​சிகிச்சை முறைகள்

சிறுநீரகம் செயல்பாடு குறைந்தோ அல்லது செயலிழப்பு ஏற்பட்டாலோ அதற்கென முற்றிய நிலையில் சில மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மூன்று சிகிச்சைகள் இருக்கின்றன.

1. ஹீமோ டயாலிசிஸ் - இது இயந்திரம் மூலம் சிறுநீரகப் பகுதியில் உள்ள மொத்த ரத்தத்தையும் உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டு பின் புதிய ரத்தத்தைச் செலுத்துதல்

2. பெரிடோனியல் டயாலிசிஸ் - குழாய்களின் வழியாக சுத்திகரிப்பு திரவத்தை உள்ளே செலுத்தி சில மணி நேரங்கள் கழித்து பின் மீண்டும் அதை வெளியேற்றுவார்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்ய வேண்டும்.

3. சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை - மேற்கண்ட இரண்டு முறைகளையும் விட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிறந்தது. சிறுநீரக தானம் தர யாரேனும் முன் வந்தால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

இவ்வளவு தூரத்துக்கு ஏன் கொண்டு போக வேண்டும். அதற்கு பதிலாக நம்மால் முடிந்த வரையில் நம்முடைய சிறுநீரகத்தை நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலமாகவே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே.

​என்ன உணவுகளை சாப்பிடலாம்?

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அதன் செயல்பாட்டை துரிதப்படுத்தவும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை தரும். குறிப்பாக சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அப்படி என்னென்ன உணவுகள் உங்களுடைய சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் என்று பார்க்கலாம்.

குடைமிளகாய்

முட்டைகோஸ்

காலிஃபிளவர்

பூண்டு

வெங்காயம்

ஆப்பிள்

நெல்லிக்காய்

ப்ளூபெர்ரி

ஸ்டிராபெர்ரி

செர்ரி பழங்கள்

சிவப்பு திராட்சை

முட்டையின் வெள்ளைக்கரு

மீன்

ஆலிவ் ஆயில்

ஆகியவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். உங்களுடைய சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்