ஆப்நகரம்

உடலுக்கு இளநீர் நல்லதுதான்... ஆனால் யாரெல்லாம் குடிக்கவே கூடாது...

தேங்காய் நீரை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவது உங்களுக்கு பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள் இளநீரை குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதிகமாக தேங்காய் நீரை அருந்துவதால் எந்த மாதிரியான தீமைகள் உண்டாகும் என அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 6 May 2021, 11:06 am
இளநீர் இந்த வெயில் காலத்தில் எல்லாரும் விரும்பி சாப்பிடும் பானமாகும். இந்த இளநீர் நமக்கு ஏராளமான நன்மைகளை அளித்தாலும் நிறைய தீமைகளை தருகிறது. இளநீரில் எலக்ட்ரோலைட் என்ற கலவை உள்ளது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது கோடை வெப்பத்தில் உடலை குளிர்விக்க உதவுகிறது. இந்த இளநீரில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி மற்றும் பல அத்தியாவசியமான தாதுக்கள் உள்ளன.
Samayam Tamil disadvantages of tender coconut water bad for diabetes athletes blood pressure
உடலுக்கு இளநீர் நல்லதுதான்... ஆனால் யாரெல்லாம் குடிக்கவே கூடாது...


​இளநீர்

இது உடலில் பல செரிமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், ஃபோலேட், செலினியம் மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் தேங்காய் நீரில் உள்ளன. உடலுக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகள் இதில் உள்ளன. இருப்பினும் இந்த தேங்காய் நீர் சில பக்க விளைவுகளையும் உண்டாக்குகிறது.

​இளநீரின் தீமைகள்

டையூரிடிக் பண்புகள் :இளநீரில் டையூரிடிக் பண்புகள் அதிகளவில் உள்ளன. இளநீரில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இது இயற்கையான டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது அதிகமான சிறுநீரை வெளியேற்றுகிறது. அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற வேண்டி உள்ளதால் சிறுநீரகத்திற்கு கடுமையான வேலையை கொடுக்கிறது.

​நீரிழிவு

தேங்காய் நீரில் அதிகப்படியான சர்க்கரை உள்ளது. ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் அளவிற்கு சர்க்கரை காணப்படுகிறது. எனவே சர்க்கரை இருப்பவர்கள் தேங்காய் நீரை தினமும் குடிக்க கூடாது.

​குடல் பிரச்சினை

தேங்காய் நீர் ஒரு மலமிளக்கியாக செயல்படலாம். அதிகப்படியான தேங்காய் நீரை குடிப்பது செரிமான அமைப்பில் விளைவுகளை உண்டாக்குகிறது. எனவே எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி கொண்டவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

​ரத்த அழுத்தம்

தேங்காய் நீர் உங்க இரத்த அழுத்தத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. தேங்காய் நீர் குடிப்பதால் உங்க இரத்த அழுத்தம் கணிசமாக குறையும். எனவே குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இளநீர் குடிப்பது உங்க சோடியம் அளவை பாதிப்படைய செய்யலாம். யு.எஸ். வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, ஒரு கப் புதிய தேங்காய் நீரில் 252 மி.கி சோடியம் உள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது, ஆனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

​அழற்சி உள்ளவர்கள்

அழற்சி இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் நல்லதல்ல. உணவு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் பலவித பிரச்சினைகளை உண்டாக்கும். இது அழற்சியை ஏற்படுத்தி பலவித நோய்த்தொற்றுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

​எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகிறது

தேங்காய் நீரை அதிகமாக உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமாக குடிப்பதால் ஹைபர்கலேமியா ஏற்படலாம். ஹைபர்கலீமியா என்பது பலவீனம், நனவு இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. தேங்காய் நீரை குடிக்கிறீர்கள் என்றால் அதை பாதுகாப்பாக குடிக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான இளநீர் உயிரிழப்பை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

​கலோரி அளவு

தேங்காய் நீரின் கலோரிகள் அதிகம். 11 அவுன்ஸ் தேங்காய் நீரில் 60 கலோரிகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பு :ஒரு கோப்பை தேங்காய் நீரில் 92 கலோரிகள் உள்ளன. இது எடையை அதிகரிக்க உதவுகிறது.

​விளையாட்டு வீரர்களுக்கு

தேங்காய் நீர் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல. ஏனெனில் விளையாட்டு வீரர்கள் இதை குடிக்க முடியாது. தேங்காய் நீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. மற்ற விளையாட்டு பானங்களுடன் ஒப்பிடும்போது தேங்காய் நீரில் சோடியத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது.

தேங்காய் நீரை உடனடியாக உட்கொள்ள வேண்டும். திறந்த பிறகு வைத்திருந்து குடிக்கக் கூடாது. ஏனெனில் ரெம்ப நேரம் திறந்து வைத்தால் ஊட்டச்சத்துக்கள் இழப்பு ஏற்படலாம்.

​நுரையீரல் பிரச்சினை

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் என்பது ஒரு பரம்பரை நோயாகும், இது நுரையீரல் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கிறது மற்றும் உடலில் உப்பு அளவைக் குறைக்கும். சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் உள்ளவர்கள் உப்பு அளவை அதிகரிக்க திரவங்கள் அல்லது மாத்திரைகள் எடுக்க வேண்டியது அவசியம். தேங்காய் நீரில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருப்பதால், நுகர்வு கட்டுப்படுத்துவது நல்லது.

தேங்காய் நீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது அறிவுறுத்தப்படுவதில்லை.

அறுவை சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் தேங்காய் நீர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டில் தலையிடக்கூடும்.

இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் தேங்காய் தண்ணீரை குடிக்க வேண்டாம்.

எனவே தேங்காய் நீர் ஒரு பக்கம் ஆரோக்கியமானது என்றால் கூட அதன் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்