ஆப்நகரம்

காற்று மாசு நிறைந்த பகுதியில் வசிப்பவரா நீங்கள்?- மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம்!

காற்று மாசு நிறைந்த பகுதியில் வசிப்பதால், அதிக காற்று மாசு வரும் என்று, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 28 Apr 2017, 9:53 pm
காற்று மாசு நிறைந்த பகுதியில் வசிப்பதால், அதிக காற்று மாசு வரும் என்று, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil do you live in an area with high air pollution you are more susceptible to a heart attack
காற்று மாசு நிறைந்த பகுதியில் வசிப்பவரா நீங்கள்?- மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம்!


இதுதொடர்பாக, பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நெதர்லாந்து நாட்டின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகளும் இணைந்து, விரிவாக ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும்போது, அதில் உள்ள நச்சுப் பொருட்கள், நமது நுரையீரலுக்குச் சென்று, அங்கிருந்து ரத்த ஓட்டத்தில் கலந்து, படிப்படியாக இதய குழாய்களில் படிந்து, அடைப்பு ஏற்படுத்துவதாக, உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டின் உலகம் முழுவதும் நடைபெற்ற மாரடைப்பு மரணங்கள் அனைத்தும் இதற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 72 சதவீத மரணங்கள், காற்று மாசு காரணமாக, இதய ரத்தக் குழாய்களில் நச்சு படிந்து, மாரடைப்பு மூலமாக நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் காற்று மாசுப்பொருட்கள் எளிதில் கலந்துவிடுகின்றன. பின்னர், படிப்படியாக அவை ஒன்றுசேர்ந்து, படிமமாக மாறி, மாரடைப்பு உள்பட பலவித பாதிப்புகளை நம் உடலில் ஏற்படுத்துகின்றன. எனவே, காற்று மாசில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று, அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tiny particles in polluted air can travel from the lungs into our bloodstream and increase the risk of a heart attack or stroke, a new study warns.

அடுத்த செய்தி

டிரெண்டிங்