ஆப்நகரம்

நிஜமாவே சுடுதண்ணியில எலுமிச்சை சாறு கலந்து குடிச்சா கொழுப்பு குறையுமா?... ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன

பலருக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனை அதிக கொழுப்பு இருப்பது தான். அதனைக் குறைக்க பலரும் பலவித வழிகளைக் கையாள்வார்கள். சிலருக்கு சில வைத்தியங்கள் கை கொடுக்கும். சிலருக்கு கை கொடுக்காது. சூடான எலுமிச்சை தண்ணீர் குடிப்பது அதிக கொழுப்பை குறைக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிப்போம். அது உண்மையா என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

Samayam Tamil 23 Jul 2021, 6:18 pm
வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழம் எடை இழப்புக்கு உதவும் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். சூடான தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது எடை குறைப்புக்கு மட்டுமின்றி, கொழுப்புகளைக் குறைக்கவும் உதவும் என்று கூறுவது உண்மையா என்பது தெரியாமலே எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம்.
Samayam Tamil does drinking hot lemon water really help in fat loss
நிஜமாவே சுடுதண்ணியில எலுமிச்சை சாறு கலந்து குடிச்சா கொழுப்பு குறையுமா?... ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன


​சூடான எலுமிச்சை சாறு அருந்துவது கொழுப்பைக் குறைக்குமா ?

எலுமிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி செரிமானத்துக்கு உகந்தது. ஆனாலும், சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது கொழுப்பைக் குறைக்கும் என்பது ஒரு கட்டுக்கதை தான் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எடை இழப்பு என்று வரும்போது வழக்கமான சாதாரண தண்ணீரை விட எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் சிறந்தது இல்லை. இருப்பினும், அதிக கலோரி கொண்ட செயற்கை பானங்களை அருந்துவதற்கு பதிலாக குறைந்த கலோரிகள் உள்ள எலுமிச்சை சாறு கலந்த சுடுநீரை பயன்படுத்தலாம்.

​எலுமிச்சையின் பயன்கள்

சூடான எலுமிச்சை நீரின் பிற ஆரோக்கிய நன்மைகளைப் பொறுத்த வரை, அது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். அதோடு உங்களின் சருமத்திற்கு பல்வேறு அதிசயங்களையும் செய்யும். மேலும், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி தோல்களில் ஏற்படும் சுருக்கம், வறண்ட சருமம், சூரியனால் சருமத்தில் ஏற்படும் சேதம், வயதான தோற்றத்தைக் கொடுக்கும் காரணிகள் போன்றவற்றைக் குறைக்கிறது.

​எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு

எலுமிச்சம் பழம் உங்களின் உடலை வறட்சியடையாமல் தடுப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதோடு உங்களின் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் திருப்தியையும் எலுமிச்சை வழங்கும். இவையே உங்களின் எடை இழப்பிற்கு உதவுகின்றன. உதாரணமாக, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸின் மூலம் குறைந்தது 6 கிராம் கலோரிகள் வரை எரிக்கப்படும்.

​வெறும் வயிற்றில் குடிக்கலாமா

உங்களின் உடல் எடையில் மாற்றம் தெரிய எலுமிச்சை ஜூஸில், சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் உங்களின் தேவையற்ற கூடிப் போன உடல் எடை குறையும். அதோடு எலுமிச்சை ஜூஸ் அருந்துவது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். இதனால் உங்களின் உடல் எடை குறைவதோடு, உங்களின் உடல் ஆரோக்கியம் பெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்