ஆப்நகரம்

ஐஸ் டீ குடித்தால் காலரா வரும்: ஆய்வில் எச்சரிக்கை

ஐஸ் டீ குடிப்பதால், காலரா நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

TNN 15 Apr 2017, 8:12 pm
ஐஸ் டீ குடிப்பதால், காலரா நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil drinking iced tea can up risk of cholera in endemic countries
ஐஸ் டீ குடித்தால் காலரா வரும்: ஆய்வில் எச்சரிக்கை


இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், வியட்நாம் உள்ளிட்ட 3ம் உலக நாடுகளில், ஐஸ் டீ குடிப்பதே, காலரா நோய் ஏற்படுவதற்கான, வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நீரை கொதிக்க வைக்காமல், ஐஸ் கட்டி போட்டு, டீ குடிப்பதால், உணவுக்குழலில் அது சென்று சீரணிக்க முடியாமல், அப்படியே படிந்துவிடுவதாகவும், இது விப்ரியோ காலரே வகை பாக்டீரியா செழித்து வளர முக்கிய காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கு கொதிக்க வைக்கப்பட்ட, வேக வைக்கப்பட்ட கடல் வகை உணவுகள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, காலரா நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் சராசரியா காலரா நோயில் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதற்கு நன்கு வேகவைக்கப்படாத உணவு வகைகள், மற்றும் நன்கு கொதிக்க வைத்த நீரை அருந்தாது போன்றவை முதன்மை காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Drinking Iced Tea Can Up Risk of Cholera in Endemic Countries: WHO reports

அடுத்த செய்தி

டிரெண்டிங்