ஆப்நகரம்

ஹை பிளட் பிரஷரை எளிதாக கண்ட்ரோல் செய்யும் எளிய பானங்கள், உடனே பலனும் தெரியுமாம்!

உயர் இரத்த அழுத்தம் என்பது மெல்ல ஆளை கொல்லும் நோய்களில் ஒன்று என்றும் சொல்லலாம். அந்தளவுக்கு அபாயகரமானது.

Samayam Tamil 3 Jun 2020, 5:14 pm
கட்டுப்படுத்த வேண்டிய நோய்களில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று என்கிறது மருத்துவத்துறை. இதில் கவலை தருவது உயர் ரத்த அழுத்த அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிய முடிவதில்லை என்பதுதான்.
Samayam Tamil drinking these five healthy drinks can reduce high blood pressure
ஹை பிளட் பிரஷரை எளிதாக கண்ட்ரோல் செய்யும் எளிய பானங்கள், உடனே பலனும் தெரியுமாம்!

பெரும்பாலான மாரடைப்பு மரணங்களுக்கு காரணமே கட்டுக்குள் வைக்காத உயர் இரத்த அழுத்தம் தான். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரைகள் இருந்தாலும் பெருமளவு உணவின் மூலமும் குறைக்கமுடியும். உணவை போன்று சில வகையான பானங்களும் கூட சிறப்பாகவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். அத்தகைய பானங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.


​அபாயமிக்கது உயர் இரத்த அழுத்தம் - உயர் இரத்த அழுத்தம் குறைக்கும் பானங்கள்

உலகளவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் தொற்று நோய் போல் அதிகரித்துவருகிறது. உயர் இரத்த அழுத்தமே பல இதய நோய்களை உண்டாக்க காரணமாகவும் இருக்கிறது.


கொரோனாவை எதிர்க்கும் 10 விதமான ஊட்டச்சத்து பானங்கள் தவிர்க்காமல் குடியுங்கள்!


இதை கட்டுக்குள் வைக்க மருந்தும், மாத்திரைகளும் தவிர்த்து ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் உப்பு, கொழுப்பு உணவை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உணவின் மூலமும் கட்டுப்படுத்தப்படும் போது பெருமளவு இதய நோய்களை குறைத்துவிடமுடியும் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலாகவே இருக்கிறது. உணவை போன்று சில ஊட்டச்சத்து பானங்களும் கூட உயர் இரத்த அழுத்த அளவை குறைக்க பெருமளவு உதவி செய்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

​நெல்லிக்காய் பானம் - உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் பானங்கள்

நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்த குழாய்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் தீவிரமாகாமல் தடுக்கப்படுகிறது. இவை இரத்த நாளங்களை மென்மையாக நெகிழ்வாக ஆக்குவதால் இரத்த அழுத்தம் மேலும் குறைகிறது.


நெல்லிக்காயை தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து உடன் புதினா, கொத்துமல்லி, சம அளவு தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது நெல்லி சாறுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் ஒரு டம்ளர் நெல்லிச்சாறு இரத்த அழுத்தத்தை நன்றாக கட்டுக்குள் கொண்டுவரும். இதேபோன்று எலுமிச்சைசாறு சம அளவு நெல்லிக்காய் சாறுடன் மிதமான வெந்நீரில் கலந்து குடித்தாலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்

​அன்னாசிப்பழ சாறு - உயர் இரத்த அழுத்தம் குறைக்கும் பானங்கள்

வெளியே முள் போன்று இருந்தாலும் உள்ளே இனிப்பும், புளிப்பும் நிறைந்த பழம். அன்னாசிப்பழத்தில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் இவை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்க கூடியது. இவை இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இவை உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் வருவதை தடுக்கும். இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தினமும் ஒரு டம்ளர் அன்னாசிப்பழச்சாறு உங்கள் இதயத்தை பாதுகாக்கவும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

​மாதுளம்பழச்சாறு - உயர் இரத்த அழுத்தம் குறைக்கும் பானங்கள்

மாதுளம் பழம் இரத்தத்தை சுத்திகரிக்ககூடியது. உடலில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தக்கூடியது. வளரும் பருவம் முதலே தினம் ஒரு டம்ளர் மாதுளை சாறு குடித்துவந்தால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும். இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை தீவிரமாக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் இரும்புசத்தும் இருப்பதால் இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.


மாதுளம்பழச்சாறு தொடர்ந்து குடித்துவந்தவர்களை ஆய்வு செய்வதில் அவர்களது உயர் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லையென்றால் தொடர்ந்து ஒரு டம்ளர் மாதுளம்பழச்சாறு குடித்து வாருங்கள். பிறகு உயர் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

​க்ரீன் டீ - உயர் இரத்த அழுத்தம் குறைக்கும் பானங்கள்

க்ரீன் டீ கொழுப்பை குறைக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்க க்ரீன் டீ உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எடை குறைக்க உதவும் சிறந்த டயட் போன்று செயல்படும் க்ரீன் டீ ஆற்றல் வாய்ந்தது. சுகாதாரம் நிறைந்தது. க்ரீன் டீ உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் அது இதய அபாயத்தையும் குறைக்கிறது. எனினும் இந்த க்ரீன் டீயை தினமும் மூன்று கப் வரை மட்டுமே குடித்தாலே போதும். அளவுக்கு மேல் குடிக்க வேண்டாம்.


மாதவிடாய் நாட்களை இயல்பாக கடக்க மென்சுரல் கப் பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக உணர்வீர்கள்!


உயர் இரத்த அழுத்தம் மிக அபாயகரமான அளவு இருந்தாலும் மருந்து மாத்திரைகளோடு இந்த பானங்களையும் தவிர்க்காமல் எடுத்து வந்தாலே கணிசமாக குறைவதை பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்