ஆப்நகரம்

எடையை குறைத்து கொழுப்பை கரைத்து சும்மா சிக்குனு மாத்தும் பூசணிக்காய்... எப்படி சாப்பிடணும்?

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணியானது உடல் எடையை குறைக்க உதவுகிறது என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Samayam Tamil 2 Dec 2020, 11:33 am
பூசணியானது தாவர வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் இந்த காய்கறி பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக சமையலில் சூப், க்ரேவி மற்றும் இனிப்பு வகைகளை செய்வதற்கும் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது எடை இழப்பை குறைக்க வெகுவாக உதவுகிறது. முக்கியமாக பெண்களுக்கு இது மிகவும் உதவிப்புரிகிறது.
Samayam Tamil eat pumpkin for weight loss and to melt fat naturally
எடையை குறைத்து கொழுப்பை கரைத்து சும்மா சிக்குனு மாத்தும் பூசணிக்காய்... எப்படி சாப்பிடணும்?


பூசணிக்காயை கொண்டு சிலர் லட்டுகள் கூட செய்கிறார்கள். ஆனால் அது ஆரோக்கியமான உணவு அல்ல. நீங்கள் விரும்பினால் பூசணி சூப், அல்லது கிரேவி செய்து சேர்த்து கொள்ளலாம்.
பூசணிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் அவை கொழுப்பு மற்றும் சோடியம் கொழுப்புகள் இல்லாதவை. மேலும் இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். எடை இழப்பிற்கு பூசணிக்காய் எவ்வாறு உதவுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

​கலோரிகள் குறைவு:

யு.எஸ்.டி.ஏ வின் தரவுகளின்ப்படி 100 கிராம் பூசணிக்காயில் 26 கலோரிகள் மட்டுமே உள்ளன என கூறப்பட்டுள்ளது. உடல் எடைக்கு அதிக கலோரிகளே காரணமாக அமைகின்றன. எனவே உணவை குறைக்காமல் உடல் எடையை குறைக்க உங்களுக்கு பூசணிக்காய் உதவும்.

​நார்ச்சத்து அதிகம்:

ஊட்டச்சத்துக்களையும் தாண்டி பூசணிக்காயில் பல சத்துக்கள் உள்ளன. நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு 200 கிராம் பூசணியிலும் 1 கிராம் ஃபைபர் கிடைக்கும். பைபர் செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது எடை இழப்புக்கு மட்டுமல்ல. பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. எனவே அதிக எடை கொண்டவர்கள் பூசணிக்காயை தங்களது சமையலில் சேமிக்கும் நேரமிது.

​உடற்பயிற்சிக்கான சிறந்த உணவு:

பூசணிக்காய் அதிகமாக பொட்டாசியத்தை கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரியாது. இதனால் தசை வலுவடைதற்கு பூசணிக்காய் அதிகமாக உதவுகிறது. 100 கிராம் பூசணியில் 340 மி.கிராம் பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியத்தை விட இதன் அளவு அதிகமாகும்.

நெல்லிக்காய் சாறும் சீரகமும் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பூசணிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக உள்ளன. இதனால் பூசணிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நல்ல நோய் எதிர்ப்பு சக்தியானது மேம்பட்ட எடை இழப்புக்கு உதவுகிறது.

​மன அழுத்தத்தை சரி செய்கிறது

பூசணிக்காய்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக சில விஷயங்களை கொண்டுள்ளது. இதில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது ஆரோக்கியமான மனநிலைக்கு உதவுகிறது. அதே நேரத்தில் மன அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. நீங்கள் எடை இழப்பை பெற ஆரோக்கியமான மன நிலையை கொண்டிருப்பது அவசியமாகும்.

குடலுக்கு எந்த பிரச்சினையும் வராம ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?...

​எடை இழப்பு

உடல் எடை இழப்பிற்கு ஒரு அதிசய உணவாக பூசணிக்காய் பார்க்கப்படுகிறது. பல ஊட்டச்சத்துக்களை தரும் பூசணி முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள சத்துக்கள் பல உடல் உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இது உடல் வளர்சிதை மாற்றத்தை சமப்படுத்துவதற்கு உடலுக்கு உதவுவதால் எடை இழப்பு எளிமையாகிறது.

வெயிட் குறைக்கிறதுல இருந்து சரும பளபளப்பு வரை இந்த நூல்கோல் காய் செய்யும் அற்புதத்தை நீங்களே பாருங்க...

​குடல் ஆரோக்கியம்

இது குடலுக்கும் நன்மை பயக்கிறது. ஏனெனில் இதில் உள்ள பாக்டீரியாக்கள் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் பூசணியை உட்கொள்ளும் போது அதில் தாதுக்கள் அதிகமாக உள்ளதால் இது கருவுறுதல் தொடர்பான விஷயங்களுக்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள பீட்டா மற்றும் கரோட்டின் நிறைந்திருப்பதால் கண்கள் மற்றும் சருமத்திற்கு இவை நன்மை பயக்கின்றன.

எனவே உங்கள் உணவில் பூசணிக்காயை முக்கிய உணவாக சேர்த்துக் கொள்ளவும். இது உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கு உதவி புரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்