ஆப்நகரம்

‘எண்ணெய் நிறைந்த மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோயை தடுக்கலாம்’

எண்ணெய்ப்பசை நிறைந்த மீன்களை வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

TNN 19 Aug 2016, 10:42 pm
எண்ணெய்ப்பசை நிறைந்த மீன்களை வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil eating oily fish may lower risk of diabetic vision loss
‘எண்ணெய் நிறைந்த மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோயை தடுக்கலாம்’


உலக அளவில், சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக, சிறுவர் முதல் வயதானவர்கள் வரை பலரும் கடும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். இதனை தடுக்கும் முறைகள் பற்றி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு தொடங்கி, 2009ம் ஆண்டு வரை 55 வயது முதல் 88 வயது வரையான நபர்களை இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொண்டதாக, மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு, வாரம் இருமுறை எண்ணெய்ப்பசை நிறைந்த மீன் உணவுகளை கொடுத்துவந்ததாகவும், இதன்மூலமாக, அதிதீவிர நிலையில் இருந்த நீரிழிவு நோய் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வகை மீன்களில் உள்ள ஒமேகா 3 பாலிசக்கரை கொழுப்புச் சத்து, இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்