ஆப்நகரம்

Male Fertility : ஐஸ் வாட்டர் குடிச்சா ஆண்மைக் குறைபாடு வருமா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி தகவல்

ஆண்கள் அதிகமாக ஐஸ் வாட்டர் (அதிக குளிர்ச்சியான) தண்ணீரை குடித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது, எதனால் குளிர்ந்த நீர் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் CARE ஹாஸ்பிடல்ஸின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் எம். ரஜினி நம்மிடையே சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 21 Apr 2023, 4:39 pm
சமீபத்தில் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் தொடர்ச்சியான அதிக அளவில் குளிர்ச்சியான நீரைப் பருகும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஆரோக்கியமற்ற பலவீனமான விந்தணுக்கள் உற்பத்தியும் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது.
Samayam Tamil effects of drinking cold water on male fertility according to obstetrics and gynecologist
Male Fertility : ஐஸ் வாட்டர் குடிச்சா ஆண்மைக் குறைபாடு வருமா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி தகவல்


ஐஸ் வாட்டர் குடித்தால்...

அதிக அளவில் குளிர்ந்த நீரை குடிக்கும்போது இயல்பாகவே உடலின் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். ஓரளவுக்கு மேல் உடல் வெப்பநிலை குளிர்ச்சியடையும்போது விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் உற்பத்தியில் குறைபாடும், ஆரோக்கியமற்ற விந்தணுக்களும் உற்பத்தியாகும் வாய்ப்பு மிக அதிகம்.


விதைப்பை புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்? என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?

விந்துக்களை சிகிச்சை மூலம் உற்பத்தி செய்ய முடியுமா?

​விதைப்பையின் ரத்த ஓட்டம்

விதைப்பை விந்தணுக்களை உற்பத்தி செய்கிற போது விதைப்பையிலுள்ள விதைகளை உடலின் வெளிப்புறத்தை நோக்கி உந்தித் தள்ளும். அதற்குக் காரணம் சரியான அளவில் விந்தணு உற்பத்தி நடைபெற வேண்டுமானால் விதைப்பையின் வெப்பநிலை உடலின் மற்ற பாகங்களின் வெப்பநிலையைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.



prostate cancer: விதைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னென்ன... எப்படி கண்டறிவது?



இதுவே அதிகமாக குளிர்ச்சியான நீரை குடிப்பதோ அல்லது தொடர்ச்சியாக குளிர்ந்த நீரை குடித்துவரும் நபராகவோ இருந்தால் அதன் காரணமாக அதிக குளிர்ச்சியடைந்து விதைப்பைக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபடலாம். இதனால் விதைப்பையின் வெப்பநிலை சீரற்றதாகி விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கச் செய்யலாம்.

​ரத்த நாளங்கள் சுருக்கம்

அதிக அளவில் குளிர்ச்சியான நீரை பருகும்போது வாசோகன்ஸ்டிரிக்ஷன் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்பது விதைப்பையிலுள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் குறுகல் தன்மை அல்லது சுருக்கம் ஆகும்.


ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு பிரச்சினை... தொடர்புடைய கேள்விகளும் பதில்களும்


இந்த ரத்த நாளங்களில் சுருக்கங்கள் ஏற்படும்போது அதனால் பிறப்புறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். அதனால் விறைப்புக் கோளாறு, விந்தணு உற்பத்தி குறைபாடு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

​ஐஸ் வாட்டர் குடிக்கவே கூடாதா?

மிக அரிதாக எப்போதாவது ஐஸ் வாட்டர் குடிப்பது ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் அதிகமாக குளிர்ந்த நீரை குடிப்பது, தொடர்ச்சியாக குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.














எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்