ஆப்நகரம்

மது அதிகமா குடிச்சா இந்த எல்லா பிரச்சினையும் சேர்ந்தே வரும்...

அதிகப்படியாக மது அருந்துவது என்பது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக கல்லீரலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு பானமாக மது உள்ளது. எனவே மது கல்லீரலில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என இப்போது விரிவாக பார்க்கலாம்.

Samayam Tamil 2 Nov 2021, 7:23 pm
மக்கள் பலரும் மதுவிற்கு அடிமையாகி வரும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். உலகம் முழுவதும் பிரபலமான பானமாக மது இருக்கிறது. மதுவை அதிகமாக அருந்துவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக குடிப்பழக்கமானது கல்லீரலில் பெரும் பாதிப்பை உண்டாக்கிறது.
Samayam Tamil excessive alcohol drinking can causes liver disease
மது அதிகமா குடிச்சா இந்த எல்லா பிரச்சினையும் சேர்ந்தே வரும்...


​ஏ.ஆர்.எல்.டி

குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பானது ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய் (ஏ.ஆர்.எல்.டி) என அழைக்கப்படுகிறது. இதனால் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹால் ஹெபடைடிஸ் மற்றும் ஆல்கஹால் சிரோசிஸ் ஆகிய மூன்று வெவ்வேறு கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துமே உடலில் தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளாகும்.

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படும்போது அதை சில அறிகுறிகளின் வழியே அறிய முடியும். அந்த அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.

​சோர்வு

கல்லீரல் பாதிப்பு காரணமாக சோர்வு அல்லது பலவீனமான உணர்வு ஏற்படும். இது வைரஸ் பிரச்சனை, அதிகப்படியான மது அருந்துதல் அல்லது பரம்பரை நோய் இந்த மூன்று காரணங்களால் ஏற்படலாம். இதனால் ஏற்படும் சோர்வானது லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.

​பசியின்மை மற்றும் எடை குறைதல்

அதிகப்படியான மது அருந்துதல் காரணமாக உங்களுக்கு பசி ஏற்படுவதில் பிரச்சனை ஏற்படலாம். இதனால் குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படும், உங்கள் உடலில் சிறிது சிறிதாக ஆற்றல் குறையும். உடலுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்போது அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. இதனால் உடலில் சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இல்லாமல் போகலாம்.

​குமட்டல்

ஆல்கஹால் ஹெபடைடிஸ் போன்ற நோயால் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியுடன் கூடிய வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் இதனால் வயிற்றில் அசௌகரியம், காய்ச்சல் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போதல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான ஆல்கஹால் உட்கொண்டீர்கள் எனில், அதனால் கல்லீரல் அழற்சியின் அளவானது அதிகரிக்கும். இது கல்லீரலில் அதிகப்படியான வலியை ஏற்படுத்தும்.

​எடை இழப்பு

அதிகப்படியான மது அருந்துதல் என்பது நமக்கு பசியின்மையை ஏற்படுத்தும். இதனால் விவரிக்க முடியாத அளவில் எடை இழப்பு ஏற்படலாம். மதுவின் காரணமாக கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். கடுமையான உடல் எடை குறைகிறது எனில் தொடர்ந்து மது அருந்துபவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

​கல்லீரலில் வீக்கம்

பல ஆண்டுகளாக தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் வீக்கம் என்பது ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்க்கான பொதுவான அறிகுறியாகும். இது மது அருந்தும் நபருக்கு கடுமையான ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்தும்.

எனவே அதிகப்படியான மது அருந்துவது எப்போதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயமே. எனவே அதிகமாக மது அருந்துபவர்கள் அதை கை விட முயற்சிக்கலாம் அல்லது குடிக்கும் அளவை குறைக்க கூட முயற்சிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்