ஆப்நகரம்

health facts: டீ குடிக்கும்போது என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது...

மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக, புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்வதற்கு தான் டீ குடிக்கிறோம். ஆனால் சிலருக்கு அதுவே பழக்கமாகி, டீக்கு அடிமையானவர்கள் தான் பலர். சிலரை பார்த்திருப்பீர்கள் எப்போது, எந்த நேரத்தில் டீ கொடுத்தாலும் குடிப்பார்கள். அது எவ்வளவு தவறு, அதேபோல டீ குடிக்கும்போது வேறு என்னென்ன பொருள்கள் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 17 Jun 2022, 5:02 pm
நிறைய பேருக்கு டீ ரிலாக்ஸ் ஆகவும் ரசித்தும் குடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் சில நபர்கள் டீ கூடவே நொறுக்குத் தீனி சாப்பிடுவது தவிர்க்க முடியாத விஷயமாக வைத்துள்ளனர். குறிப்பாக டீ, காபி குடிக்கும்போது பஜ்ஜி, போண்டா, பக்கோடா என் எதையாவது கொரிப்பது எவ்வளவு ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பது பற்றி யோசிப்பதே இல்லை.
Samayam Tamil foods avoid to eat along with tea particularly bajji vada
health facts: டீ குடிக்கும்போது என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது...


​மஞ்சள் சேர்த்த பொருள்கள்

டீ குடிக்கும் போது எந்த மாதிரியான பொருட்களை சாப்பிடக் கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். சூடான பானத்தில் மஞ்சள் சேர்த்து சாப்பிடக் கூடாது மிதமான சூட்டில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் போன்ற ரசாயனங்களை சூடான பானத்தில் எடுத்துக் கொள்ளும்போது செரிமான அமைப்புக்கு தீங்கு உண்டாகும் எனவே இதனை தவிர்க்கவும்.

​உணவிற்கு பின் டீ குடிப்பது

நம்மில் நிறைய பேருக்கு இந்த பழக்கம் இருக்கும். உணவு சாப்பிட்டு முடித்ததும் ஒரு டீ அல்லது காபி குடிக்கிற பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான பழக்கம். குறிப்பாக மதிய உணவுக்குப் பின்பு டீ குடிக்கவே கூடாது. அது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். ஏனெனில் தேநீரில் உள்ள டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் நம்முடைய உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச விடாமல் செய்து விடும்.

போதிய அளவு தினமும் உடற்பயிற்சி செய்கிறவர்கள் மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த நினைப்பவர்கள் மதிய உணவுக்குப் பின்பு வேண்டுமானால் லெமன் டீயை எடுத்துக் கொள்ளலாம்.

​டீயுடன் பஜ்ஜி, போண்டா

நம்மில் பல பேருக்கு டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.

இவ்வாறான எண்ணெய் உணவுகளைச் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் கேடு தான்.

தேநீர் அல்லது காபியுடன் கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களை சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

​காலையில் லெமன் குடிக்கலாமா?

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் லெமன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெறும் வயிற்றில் தேயிலையுடன் சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை சேர்த்து எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல.

அது குடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் வயிறு உப்பியது போன்ற உணர்வு, வயிறு வீக்கம் ஆகியவை உண்டாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்