ஆப்நகரம்

குழந்தை வளர்ப்பு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் தெரியுமா? அறிவோம் வாருங்கள்!

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

TNN 5 Oct 2017, 5:37 pm
சென்னை: குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.
Samayam Tamil have to spend more time with children
குழந்தை வளர்ப்பு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் தெரியுமா? அறிவோம் வாருங்கள்!


ஒரு குடும்பம் சிறப்பாக செயல்பட திட்டமிடுதல் அவசியம். அதனை கணவன், மனைவியும் நன்றாகவே செய்வர். ஆனால் அதில் பெரும்பாலும் தவறவிடுவது குழந்தைகள். இது நிச்சயம் சரியான செயல்பாடாகாது. நம் வாழ்வில் மிகப்பெரும் சந்தோஷத்தை அளிப்பவர்கள் குழந்தைகளே. அவர்களையும் இணைத்துக் கொண்டு திட்டமிடுதல் சிறப்பான வாழ்வாக அமையும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் குழந்தைகள் தாங்களாகவே எழுமாறு செய்ய வேண்டும். உதாரணமாக, வீட்டில் செடிகள் வளர்த்து, அதில் ஒன்றை குழந்தைகளிடம் கொடுத்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன், அதற்கு நீர் ஊற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும். முதல் நாள், எங்கள் செடிகள் நீர் அருந்தி, இலைகளை அசைத்து நன்றி சொல்லின. ஆனால் உங்கள் செடி சோர்ந்து கிடப்பதாக கூறி, குழந்தைகளை விழிப்படையச் செய்யுங்கள்.

நாள்தோறும் படிக்கும் செய்தித்தாள்களில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைப்பதை வட்டமிடுங்கள். அல்லது அதில் ஏதாவது ஒரு வடிவத்தை வரையலாம். பின்னர் செய்தித்தாளை குழந்தைகளிடம் கொடுப்பது படிக்க ஏதுவாக இருக்கும்.

குழந்தைகள் விரும்பும் உணவுப் பொருளை சமைக்க முயற்சிக்கலாம். இல்லையெனில் வழக்கமான உணவுப் பொருட்களில் காய்கறிகளைக் கொண்டு, வண்ணமயமாக்கி அழகுப்படுத்தலாம். அது நிச்சயம் குழந்தைகளை கவர்ந்து, உண்பதை ஆர்வமாக்கும். உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நாள்தோறும் வலியுறுத்தி வாருங்கள்.

வேனில் பள்ளிக்கு அனுப்புவதை விட, பள்ளிக்கு சென்று விட்டுச் செல்வது சிறந்தது. இடையே தடை ஏற்படும் நேரங்களில், அவர்களுடன் சிறிய உரையாடலை ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். பள்ளி மீதான பயம் குறையும்.

வெளியே செல்ல திட்டமிடும் போது, குழந்தைகளுக்கும் ஏற்ற இடமா என்று பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு நேரத்திலும் வெளி இடங்களில் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.

நாம் தனியாக உடற்பயிற்சி என்று செய்யாமல், குழந்தைகளோடு இணைந்து விளையாடலாம். அவர்களுடன் உட்கார்ந்து, கதைகள் கூறலாம். பள்ளி அனுபவங்களை கேட்கலாம். நல்ல நண்பனைப் போன்று, அனைத்தையும் பகிறுமாறு செய்ய வேண்டும்.

சோர்வு, வருத்தம் ஏற்படாமல் குழந்தைகளை செயல்பட முயற்சிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்தால் குழந்தை வளர்ப்பு கடினமானதாக அமையாது.

Have to spend more time with children.

அடுத்த செய்தி

டிரெண்டிங்