ஆப்நகரம்

நரம்பு பிரச்சினையை தீர்க்கும் வல்லாரை

உங்க சருமத்தை என்றும் இளமையாக வைக்க நினைத்தால் அதற்கு வல்லாரை கீரையை கையில் எடுங்கள். ஏனெனில் வல்லாரை மூலிகை உங்க சருமம் வயதாகுவதை தடுப்பதில் இருந்து சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து நன்மைகளையும் அளிக்கிறது என்கிறது ஆராய்ச்சி. இந்த வல்லாரையை கொண்டு உங்க சரும அழகை எப்படி மீட்டெடுக்க முடியும் என அறிவோம்.

Samayam Tamil 22 Sep 2021, 6:09 pm
எல்லாருக்கும் வல்லாரை கீரை பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். நினைவாற்றல் மற்றும் நீண்ட தூர ஆயுளை தரக் கூடிய சக்தி வாய்ந்த மூலிகை ஆகும். இந்த மூலிகை பாரம்பரிய, சீன மற்றும் இந்தோனேசிய ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஒன்று.
Samayam Tamil health benefits of vallarai bharami leaves in tamil
நரம்பு பிரச்சினையை தீர்க்கும் வல்லாரை


​சரும ஆரோக்கியமும் வல்லாரையும்

இது நம்முடைய மூளையின் நினைவாற்றல் சக்தியை அதிகரிக்கவும். தோல் பிரச்சினைகளை குணப்படுத்தவும், கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. இதை ஆயுர்வேதத்தின் படி சென்டெல்லா ஆசியாடிகா, ஆசியாடிக் பென்னிவார்ட் அல்லது பிரம்மி என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இதை பல மக்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய நன்மைகளை தரும் இந்த வல்லாரை மூலிகை நம் சருமத்திற்கும் நிறைய நன்மைகளை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. உங்க சருமம் பளபளப்பாகவும் சுருக்கம் இல்லாமல் இருக்கவும் வல்லாரை கீரை உதவுகிறது. அதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்.

​வல்லாரை கீரையின் நன்மைகள் :

இந்த மூலிகை குறித்து நிறைய புராணக்கதைகள் உள்ளன. 1800 இன் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் தோலில் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்த இதைப் பயன்படுத்திய போது, அந்தச் செடியை சாப்பிட்ட யானைகளின் ஆயுள் அதிகரித்ததாக நம்பப்படுகிறது. அதே மாதிரி சீன நாட்டில் உள்ள பிரபலமான முனிவர் இந்த மூலிகையை சாப்பிட்டு 200 வயதுக்கு மேல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் இதை சீன மருத்துவத்தில் வாழ்வின் அதிசய அமுதம் என்று கூறுகின்றனர். எனவே இந்த வல்லாரை கீரை கொண்டு எப்படி சுருக்கங்கள் இல்லாத சருமத்தை பெற முடியும் என கூறுகிறார் சரும மருத்துவர். இதுவரை உடல் நல ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வந்த இந்த மூலிகை தற்போது சரும அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மூலிகையை சருமம் வயதாகுவதை தடுக்கும் ஆன்டி ஏஜிங் க்ரீம்களிலும், சூரிய ஒளி பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. சருமத்தில் உள்ள தழும்புகளை போக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்களை அதிகரித்து புதிய சரும செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. சரும செல்கள் இறுக்கமடையவும், சருமம் தொய்வடைவதை தடுக்கவும் உதவுகிறது.

​வல்லாரை பற்றிய ஆய்வுத் தகவல்

2012 இல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஆய்வில், காயங்களைக் கொண்ட எலிகளின் தோலின் மீது வல்லாரை பயன்படுத்தப்பட்டது, மேலும் இந்த மூலிகை பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து புதிய சரும செல்களின் உற்பத்தியை ஊக்குவித்தது. இது தோலின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்த மூலிகையில் உள்ள இரசாயன சேர்மமான ட்ரைடர்பெனாய்டுகளின் அதிசயங்கள் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள் .இதில் விட்டமின் பி, விட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பாலிபினால்கள் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் தோலில் உள்ள காயங்களை ஆற்றவும், ஆக்ஸினேற்ற பண்புகளை வழங்கவும் உதவுகிறது.

2017 ஆம் ஆண்டில் மருத்துவ, அழகு மற்றும் புலனாய்வு தோல் மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு நாளில் 20 பெண்களின் கைகளில் ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் மற்றும் வல்லாரை சாறு அடங்கிய திரவத்தை ஆராய்ச்சியாளர்கள் அப்ளே செய்து சோதித்தனர். ஒரு கையில் வல்லாரை சாற்றையும் மறு கைக்கு அழகுக் க்ரீம்களை பயன்படுத்தினர்.

​சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க

கைகளில் உள்ள சருமத்தின் ஈரப்பதத்தை ஒரு நாள் முழுவதும் கவனித்தனர். இதில் வல்லாரை சாறு அப்ளே செய்த கைகளில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. எனவே வல்லாரை கீரை சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருவது தெரிய வந்துள்ளது. எனவே சருமத்திற்கு மென்மையை தந்து சருமத்தின் இளமைப் தன்மையை காக்கிறது.

​நரம்புகளைச் சரிசெய்ய

வல்லாரை சருமத்தில் உள்ள நரம்புகளைச் சரிசெய்ய உதவுகிறது. தோலில் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகளை சரி செய்ய உதவுகிறது. சருமத்தின் கீழ் கொழுப்பு செல்களை பிணைக்கும் இணைப்பு திசுக்களை சுருக்கி தோலில் ஏற்படும் செல்லுலைட்டை உடைக்க உதவுகிறது. எனவே பெண்களே இனி உங்க சரும பராமரிப்பில் மறக்காமல் வல்லாரையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்