ஆப்நகரம்

Thalassemia Diet : குழந்தைகளுக்கு தலசீமியா அறிகுறிகள்.. செய்ய வேண்டியதும்.. தவிர்க்க வேண்டியதும்.. ஆயுர்வேத நிபுணர் விளக்கம்..!

பெற்றோர்கள் வழியில் யாருக்காவது தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் நோய் வர வாய்ப்புண்டு. தலசீமியா கண்டறியப்பட்ட குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும். ஆயுர்வேத மருத்துவத்தில் தலசீமியா வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மூலம் நிர்வகிக்க முடியும். இது குறித்து நிபுணர் சொல்வதை இங்கு தெரிந்துகொள்வோம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 8 May 2024, 11:26 am

ஹைலைட்ஸ்:

  • தலசீமியாவானது இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் மரபணு கோளாறு..
  • ஆரஞ்சு சாறு போன்ற சில உணவுகள் உடலில் இரும்பு உறிஞ்சுதலை தூண்டும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தலசீமியா அறிகுறிகள்
சொந்தத்துக்குள் திருமணம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்த பல காரணங்கள் உண்டு. குறிப்பாக நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்யும் போது பிறக்கும் குழந்தைக்கு மரபணு நோய் ஆபத்து இருக்கலாம். அதில் ஒன்றாக தலசீமியா சொல்லப்படுகிறது. இந்த தலசீமியா நோய் என்றால் என்ன. அறிகுறிகள் எப்படி இருக்கும். இதை நிர்வகிப்பது என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர்
ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாராஜெயஸ்ரீ BAMS.

தலசீமியா என்றால் என்ன?

தலசீமியாவானது இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் மரபணு கோளாறு ஆகும். இது பெற்றோரிடமிருந்து மரபணு ரீதியாக பரவக்கூடியது . இந்த நிலை வந்தால் ஹீமோகுளோபின்கள் உடலில் அசாதாரணமாக உற்பத்தி ஆகும். இது இரத்த சிவப்பணுக்களை அதிக சேதத்துக்கு உள்ளாக்ககூடியது. இது இறுதியில் இரத்த சோகை அபாயத்தை உண்டாக்கலாம். இதில் ஆல்ஃபா தலசீமியா என்பது குரோமோசோம்களை அழிக்க கூடியது, பீட்டா தலசீமியா என்பது சிவப்பணுக்களில் நச்சுக்களை அதிகரிக்கின்றன.


ஹீமோகுளோபின் அவசியம்

ஹீமோகுளோபின் அத்தியாவசிய மூலக்கூறு. நுரையீரலில் இருந்து உடலுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்கள் திசுக்கள் மற்றும் திசுக்களில் இருந்து மீண்டும் நுரையீரலுக்கு கார்பன் டை ஆக்ஸைடு திரும்ப செய்கிறது. இந்நிலையில் தலசீமியா என்னும் நோய் பரம்பரை இரத்தகோளாறு என்று வரையறுக்கப்படுகிறது. தலசீமியா கொண்டிருப்பவர்கள் குறைவான இரத்த சிவப்பணுக்களை கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு சிறிய அளவு ஹீமோகுளோபின் மட்டுமே இருக்கும்.

பாதிக்கும் நிலை

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக்கும் போதே இந்த நிலையில் இருக்கிறார்கள். இரத்த சிவப்பணுக்களின் முக்கிய செயல்பாடு உடலுறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வது. ஆக்ஸிஜன் உடல் செல்களுக்கு உணவு. இது இரத்த சிவப்பணுக்களின் அளவை குறைக்கிறது. தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகள் சோர்வாக, பலவீனமாக அல்லது மூச்சுத்திணறலை எதிர்கொள்வார்கள். இரத்த சோகை எனப்படும் இந்நிலை தலசீமியா உள்ளவர்களுக்கு இலேசான அல்லது கடுமையானதாக இருக்கலாம். இது கடுமையாக இருந்தால் அது உறுப்புகளை சேதப்படுத்தலாம். சமயங்களில் மரணம் வரை கொண்டு செல்லலாம்.

அறிகுறிகள்
  • தலசீமியா அறிகுறிகள் தெளிவாக தெரிவதில்லை. இருப்பினும் பொதுவான அறிகுறிகளாக சொல்லப்படுவது
  • வயிற்றுப்பகுதியில் வீக்கம்
  • இருண்ட அடர்ந்த சிறுநீர்
  • இலேசான தலைச்சுற்றல்
  • மஞ்சள் நிற தோல்
  • சோர்வு
  • பசியின்மை,
  • வளர்ச்சி குறைபாடு அதாவது தாமதப்படுத்தப்பட்ட வளர்ச்சி


தலசீமியா காரணங்கள் என்ன?

இந்த நோய் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஹீமோகுளோபின் உற்பத்தியில் தொடர்புடைய மரபணுக்களில் உண்டாகும் அசாதாரண பிறழ்வுகள். இது பெற்றோரிடமிருந்து வரக்கூடிய குறைபாடு ஆகும்.
ரத்த சிவப்பு அணுக்களின் ஆல்ஃபா மற்றும் பீட்டா சங்கிலிகளை தலசீமியா பாதிக்க கூடும். இந்த பிறழந்த மரபணுக்களை உள்ள பெற்றோர்களிடமிருந்து குழந்தை ஒன்று அல்லது இரண்டு பிறழ்ந்த மரபணுக்களை குழந்தைகள் மரபு வழியாக பெறுகின்றனவா என்பதை பொறுத்து அறிகுறிகள் எதுவும் இல்லாமலோ அல்லது உயிருக்கு ஆபத்தான இரத்த சோகையாகவோ மாறலாம்.

தலசீமியாவுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை

மருந்துகளை தவிர தலசீமியா நோயாளிகள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை கொண்டிருக்க வேண்டும் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அறிகுறிகளை கட்டுக்குள் வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
அரிசி, கோதுமை தவிடு, மக்காச்சோளம், ஓட்ஸ் மற்றும் சோயா போன்ற தானியங்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதை குறைக்கும். இதனால் மேல் குறிப்பிடப்பட்ட பொருள்களை உட்கொள்ளும் போது தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கால்சியம் நிறைந்த ஏராளமான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இதனால் எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க செய்யும்.
விதைகள், பாதாம், பேரீச்சம்பழம் மற்றும் மத்தி ஆகியவை இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளின் ஆதாரங்கள்.

தவிர்க்க வேண்டியவை
  • தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைக்கும் போது இரும்பு பாத்திரங்களில் சமைக்க கூடாது. கூடுதலாக ஆரஞ்சு சாறு போன்ற சில உணவுகள் உடலில் இரும்பு உறிஞ்சுதலை தூண்டும்.
  • அதே போன்று காபி, தேநீர், பால் போன்ற பிற உணவு பொருள்கள் உடலில் இரும்புச்சத்தை குறைக்கும். தலசீமியா நோயாளிகள் தங்கள் உணவில் பன்றி இறைச்சி, கல்லீரல் சிப்பிகள், பீன்ஸ், மாட்டிறைச்சி, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் டோஃபு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
  • ப்ரூனே பழச்சாறு, தர்பூசணி , பேரீச்சம்பழம், ப்ரக்கோலி, திராட்சை மற்றும் பட்டாணி ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தலசீமியா பாதிப்பு இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

  • உடற்பயிற்சி செய்வது தலசீமியா நோயாளியின் நிலையை சமாளிக்க உதவும். தினமும் 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • உடற்பயிற்சியில் யோகாசனம் என்பது மென்மையானது. இது உடலுக்கு நெகிழ்வுத்தன்மை , சகிப்புத்தன்மை மற்றும் சுற்றோட்ட அமைப்பை மேம்படுத்துகிறது. குறிப்பாக யஸ்திகாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பர்வதசனம், கோமுகாசனம், திரிகோனாசனம், மர்ஜாரியாசனம் போன்ற ஆசனங்கள் தலசீமியாவின் அறிகுறிகளை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மரபணு நோய்களில் தலசீமியா முக்கியமானது. இது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்