ஆப்நகரம்

பசும்பால் இருக்கட்டும் தேங்காய்ப் பால் குடிச்சா எவ்ளோ நல்லது தெரியுமா?

சமீப காலங்களாகவே தேங்காய் அதிகம் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. பாரம்பரியமான உணவு பொருள்கள் எப்போதும் மகத் துவம் நிறைந்தவை என்பதற்கேற்ப இப்போது தேங்காயின் முழுமையான மருத்துவ குணங்களை உணர்ந்து மக்கள் தயக்கமின்றி பயன் படுத்தி வருகிறார்கள். மீண்டும் பழசுக்கு மவுசு என்பதை நிரூபித்துவருகிறது தேங்காயின் பயன்பாடு. தேங்காயிலிருந்து பெறப்படும் எல் லாமே உடலுக்கு கொழுப்பை தரக்கூடியவை என்று சொல்லி தவிர்த்துவந்ததுண்டு. தற்போது தேங்காய் இயற்கை தந்த அற்புத மருத்துவ குணங்களை கொண்டவை என்கிறார்கள். தேங்காயின் குணங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் தேங்காய்ப்பாலின் நன்மையை அறி வோம். விலை குறைந்த தேங்காயில் விலை மதிக்கத்தக்க மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை படித்து முடித்ததும் நீங்களே ஒப்புகொள்வீர்கள்.

Samayam Tamil 3 Jan 2020, 2:52 pm
சமீப காலங்களாகவே தேங்காய் அதிகம் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. பாரம்பரியமான உணவு பொருள்கள் எப்போதும் மகத் துவம் நிறைந்தவை என்பதற்கேற்ப இப்போது தேங்காயின் முழுமையான மருத்துவ குணங்களை உணர்ந்து மக்கள் தயக்கமின்றி பயன் படுத்தி வருகிறார்கள். மீண்டும் பழசுக்கு மவுசு என்பதை நிரூபித்துவருகிறது தேங்காயின் பயன்பாடு. தேங்காயிலிருந்து பெறப்படும் எல் லாமே உடலுக்கு கொழுப்பை தரக்கூடியவை என்று சொல்லி தவிர்த்துவந்ததுண்டு. தற்போது தேங்காய் இயற்கை தந்த அற்புத மருத்துவ குணங்களை கொண்டவை என்கிறார்கள். தேங்காயின் குணங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் தேங்காய்ப்பாலின் நன்மையை அறி வோம். விலை குறைந்த தேங்காயில் விலை மதிக்கத்தக்க மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை படித்து முடித்ததும் நீங்களே ஒப்புகொள்வீர்கள்.
Samayam Tamil here are the unlimited health benefits of coconut milk
பசும்பால் இருக்கட்டும் தேங்காய்ப் பால் குடிச்சா எவ்ளோ நல்லது தெரியுமா?


​தேங்காய்

உணவே மருந்து என்று வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவு பொருளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தது. அப்படி அவர்கள் பயன்படுத்திய எண்ணெய் வித்துக்களில் தேங்காய் எண்ணெயும் ஒன்று. அப்படி கேடுதரும் என்றால் தேங்காயை அப்போதே ஒதுக்கி வைத் திருப்பார்கள் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கொள்ள வேண்டும்.


நாளடைவில் தேங்காய் அதிக கொழுப்பை தரக்கூடியது என்று ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் தாவ ரங்களிலிருந்து பெறும் கொழுப்பு நேரடியாக இரத்தத்தில் கலப்பதில்லை. இதை ஆய்வுகளும் ஒப்பு கொள்கிறது. இப்போது பாரம்பரிய உணவின் மீது விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது அதனால் மக்கள் மீண்டும் தேங்காயை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

​உணவு பொருளில் தேங்காய்

தினமும் ஒருவேளை உணவிலாவது தேங்காய் கலந்த உணவு பயன்பாட்டில் இருக்கும். டிஃபனுக்கு தொட்டுக்கொள்ள சட்னி, தேங்காய்த் துவையல், பொரியலில் தேங்காய்த்துருவல் இப்படி தேங்காய் அன்றாட வாழ்வில் நீக்க முடியாத அளவுக்கு பயன்படுத்துகிறோம்.


இவை தவிர தேங்காய் மட்டுமே பிரதானமாக கொண்டு உணவாக தயாரிக்கப்படும் தேங்காய் சாதம், பலகாரங்கள், இனிப்பு வகைகள் என்று சுவையிலும் பிரமாதமாய் இருப்பதில் தேங்காயை மிஞ்சும் இயற்கை பொருள் இல்லை என்றே சொல்லலாம். இன்றும் பலரும் உணவு சமைப்பதில் கூட முழுக்க முழுக்க தேங்காய் எண்ணெய் தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். தேங்காய் எண்ணெய் வாசம் வீச மணக்கும் ரெஸிபிக்களுக்கு தனி உணவு பிரியர்களே உண்டு என்று சொல்லலாம். ஆரோக்கியத்தில் மட்டுமல்ல அழகுக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

​தேங்காய்ப்பாலில் என்ன இருக்கு

நமது முன்னோர்கள் மாதம் இருமுறையாவது தேங்காயிலிருந்து பிழியப்படும் தேங்காய்ப்பால் உணவு சாப்பிடுவது வழக்கம். ஆப்பம் தேங்காய்ப்பால் தொடங்கி தேங்காய்ப்பாலிலிருந்து காரக் குழம்பு, தேங்காய்ப்பால் புலவு, தேங்காய்ப்பால் பாயசம் என்று பல வகைகளை செய்வார்கள்.


தேங்காய்ப்பாலில் வைட்டமின்கள் சி, இ, பி1, பி3, பி5, பி6, சத்துகள் உண்டும். மேலும் இரும்பு, சோடி யம், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம்,பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக் கள் நிறைந்திருக்கும். நார்ச்சத்தும்,புரோட்டினும் உள்ளடக்கியுள்ளது. இதிலிருக்கும் லாரிக் அமிலம் மோனோலாரின் ஆக மாறுகிறது. இவை தேங்காயில் மட்டும் தான் அதிகம் இருக்கிறது. கொழுப்பு அமிலமான சாச்சுரேட்டர் அமிலமும் உண்டு.

​நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

வளரும் பிள்ளைகள் அனைவருக்கும் உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது குறைந்து வருகிறது. இவர்களுக்கு தேங்காய்ப்பாலை கொடுத்துவரும்போது இந்த குறைபாடு நீங்குகிறது. ஏனெனில் தேங்காய்ப்பாலில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் மோனோ லாரி னாக மாறுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.


வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு இவை உதவி புரிகிறது. எலும்புகளை பலமாக்குவ தோடு எலும்பு சம்பந்தப்பட்ட ஆஸ்டியோபெராசிஸ் நோயை கட்டுக்குள் வைக்கிறது. எலும்பு புரை, வீக்கம், எலும்பு முறிவுகள்,கீல்வாதம் போன்றவற்றையும் தடுக்கிறது. உடலின் வளர்சிதை மாற் றத்துக்கு பெரிதும் உதவுகிறது என்பதால் வளரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தேங்காய்ப்பால் நன்மை தரும்.

​இரும்புச்சத்து அதிகரிக்கிறது

உடலில் இரும்புச்சத்து குறைபாடு நேரும் போது ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இவை தொடர்ந்து குறையும் போது இரத்த சோகை பிரச்சனையை உண்டாக்கிவிடும். இதனால் கருமை யான உடல் சோர்வு, பசியின்மை, மூட்டு வலி, கண்களும் சருமமும் வெளியேறுதல் என்று பல குறை பாடுகளை உண்டாக்கிவிடும். இன்று போதிய ஹீமோகுளோபின் இல்லாமல் அவதிப்படுபவர்களி எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்கள் வாரத்தில் முன்று நாட்களாவது தேங்காய்ப்பாலை எடுத்துவந்தால் போதுமான இரும்புச்சத்து கிடைக்கும்.

​வயிற்றுப்புண் வாய்ப்புண்

வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு இலேசான காரம் கூட செல்லாது. அவர்களுக்கு தேங் காய்ப்பால் அருமையான மருந்து என்று சொல்லலாம். வெறும் வயிற்றில் காலையில் ஒரு தம்ளர் தேங்காய்ப்பால் குடித்துவந்தால் வாய்ப்புண் ஆச்சரியத்தக்க வகையில் குணமளிக்கும். அதோடு வயிற்றுப்புண் இருந்தால் தான் வாய்ப்புண் வரும் என்று சொல்வார்கள். அப்படி வாய்ப்புண் வரும்போதே தேங்காய்ப்பாலை தவிர்க்காமல் எடுத்துகொண்டால் வயிற்றுப்புண்ணும் குணமாகும், அல்சர் போன்ற பிரச்சனை இருப்பவர்களும் தேங்காய்ப்பால் எடுத்துகொள்ளலாம்.

​இதயத்துக்கு நல்லது

ஆய்வு ஒன்றில் தேங்காய்பால் இதயத்துக்கு நன்மை தரும் என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இன் னும் ஆய்வு தேவை என்ற போதிலும் தேங்காய்ப்பாலில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பானது உட லில் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரிக்கவில்லை என்பதே இதயத்துக்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஒரு மாத காலம் தேங்காய்ப்பால் குடித் தவர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் உடலில் நல்ல கொழுப்புகள் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

​இன்னமும் உண்டு

தேங்காய்ப்பாலில் இருக்கும் இரும்புசத்து உடலுக்கு சேர்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராகி றது. நரம்புகளையும் தசைகளையும் அமைதிபடுத்தும் குணத்தை கொண்டிருப்பதால் மன அழுத் தத்தை குறைக்கிறது. சிலருக்கு தசைகளில் இறுக்கம் உண்டாகி வலி அதிகரிக்கும். இந்த தசை களை தளர்ச்சியடைய செய்து உடலையும் வலுவாக்குகிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி உடலை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க் கிறது. வயிறு கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. அழகு குறித்த பராமரிப்பிலும் தேங்காய்ப் பால் சிறப்பாக உதவுகிறது.

இதில் சாச்சுரேட்டர் கொழுப்பு இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் எடுத்துகொள்ள வேண்டாம் என்கிறார்கள் . அதே நேரம் இதை குடிக்கும் போது பசி உணர்வு குறைகிறது என்பதால் உடல் எடை குறையவும் உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது.


இதில் கவனிக்க வேண்டியது தேங்காய்ப்பால் இன்று டின்களில் அடைக்கப்பட்டு கிடைத்தாலும் இவற்றை பயன்படுத்துவதை விட வீட்டிலேயே தயாரித்து ஃப்ரெஷ்ஷாக இருக்கும் போது பயன் படுத்துவதே நல்லது.


இனி வாரம் ஒருமுறையாவது தேங்காய்ப்பாலை சேர்த்துகொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் இருப் பீர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்