ஆப்நகரம்

ஒரு நாளைக்கு எவ்வளவு காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்?... எதற்குமேல் சாப்பிடக் கூடாது...

பழங்கள் மற்றும் காய்கறிகள் நம் உணவு முறைக்கு நிச்சயமாக தேவைப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான வியாதிகள் எதிர்ப்பு சக்தி வந்துவிடுகிறது. எனவே அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது பத்து முறையாவது பழங்கள் காய்கறிகளை அவ்வப்போது சாப்பிட்டு வரவேண்டும் என்று கூறுகின்றனர். அதைப்பற்றி தற்போது பார்ப்போம்.

Samayam Tamil 3 Jun 2020, 11:29 am
சிறுவயதில் நாம் பலரும் கேள்விப்பட்டிருப்போம் ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் மருத்துவர் நமக்கு தேவை இல்லை என்று ஆனால் ஒரு ஆப்பிள் மட்டும் தினமும் சாப்பிட்டால் மருத்துவர் நமக்கு தேவையில்லை என்பது சரியான வாதமாக இருக்காது. அனைத்து விதமான பழங்களும் நாம் சாப்பிட வேண்டும். அனைத்து விதமான பழங்களும் காய்கறிகளும் நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலின் எதிர்ப்பு சக்தியானது மிகவும் அதிகமாகி மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும் என்பதே உண்மை. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது பத்து பழங்களையாவது, காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.
Samayam Tamil how much have the right amount of fruits and vegetables in a day in tamil
ஒரு நாளைக்கு எவ்வளவு காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்?... எதற்குமேல் சாப்பிடக் கூடாது...



ஒரு நாளைக்கு 5 கூட போதாது அதையும் தாண்டி சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். உலக சுகாதார நிலையம் ஆனது ஒரு நாளைக்கு 10 பழங்கள் அல்லது காய்கறிகள் கலவையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பலவிதமான நோய்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று கூறுகின்றனர். உடலில் இருக்கும் நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதைத் தாண்டியும் பல விதமான நோய்கள் வராமல் தடுக்கலாம். பழங்கள் மற்றும் காய்களில் இயற்கையாகவே உள்ள பலவிதமான விட்டமின்கள் மினரல்கள் எதிர்ப்பு சக்திகள் நம் உடலுக்கு பெரும் சக்தியை தருகிறது என்று உலக சுகாதார நிலையம் குறிப்பிடுகிறது. ஒரு நாளைக்கு 10 பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது எப்படி என்று பலரும் யோசித்து வரும் நிலையில் அதை பற்றிய ஒரு சின்ன ஆய்வு.


லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஒரு ஆய்வில் ஈடுபட்டது ஆய்வு என்னவென்றால், ஒரு மனிதர் தினமும் 200 கிராம் அளவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் தினமும் சாப்பிட்டு வருவது அதனால் ஏற்படக்கூடிய நன்மை என்பதை பற்றியிருந்தது. 800 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகள் என்பது மேலே குறிப்பிட்ட 10 பழங்கள் அல்லது காய்கறிகள் கலவையாக கூட இருக்கலாம். கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் சத்து பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் வருடம்தோறும் மரணித்து வருகின்றனர். பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாது சாப்பிட்டு வந்தால் இந்த சத்து குறைபாடு காரணமாக நடத்தப்படும் மரணத்தை நிச்சயமாக நாம் தவிர்த்து விடலாம்.


பத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்று கூறி வந்துள்ளோம். ஆனால் அதை எப்படி சாப்பிடுவது என்னென்ன பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுப்பது என்று பலருக்கும் யோசனை இருக்கும் அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.


1.காலையில் எழுந்தவுடன் பிரஷ்ஷான ஆரஞ்சு பழச்சாறுடன் உங்கள் நாளை ஆரம்பம் செய்ய வேண்டும். காலை உணவுக்குப் பதில் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் சில பழங்களின் கலவைகளை நீங்கள் காலை உணவாக சாப்பிடலாம்.


மதியம் சாப்பாட்டிற்கு அல்லது உங்கள் சாப்பாட்டுடன் சேர்த்து ப்ரோக்கோலி காலிஃப்ளவர் தக்காளி இவை மூன்றையும் ஆலிவ் எண்ணெயில் வறுத்து உங்கள் மதியநேர சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

3.முழு ஆப்பிள் அல்லது வாழைப்பழத்தை உங்கள் மதிய சாப்பாட்டுக்கு பின்னர் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.


நீங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போது, மாலை நேரம், கிரேப்ஸ் பழங்களைக் கொண்டு மற்றும் பெர்ரி பழங்களை கொண்டு ஒரு ஜூஸ் தயாரித்து அதை சாப்பிடலாம். அது உங்கள் பசியையும் போக்கும் நல்ல சக்தியையும் தரும்.

5.மேலும் இரவு நேரங்களில் அதிகப்படியான பச்சைக்காய்கறிகள் கீரைகள் அதிகமாக இருக்கும்படி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மேலே குறிப்பிட்ட அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தினமும் நாம் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நிச்சயம் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து பலவிதமான நோய்கள் நமக்கு வராமல் தடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இன்று நாம் சாப்பிடும் சாதாரண உணவில் அதிகபட்ச கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் நமக்கு பலவிதமான விட்டமின்கள் மற்றும் விளைவுகளை தருவதில்லை. எனவே பழங்கள் மற்றும் காய்கறிகள் தினசரி நாம் உணவு முறையில் இருக்க வேண்டியது அவசியமாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பொழுது பலவிதமான வியாதிகள் நமக்கு வராமல் தடுப்பது நிச்சயமாக முடியும் இருதய சம்பந்தப்பட்ட வியாதிகள் போன்ற பல வியாதிகளை நம்மால் இதன் மூலம் தடுக்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்